யேசபேல் மார்க்கம் Middletown, Ohio, USA 61-0319 1நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகையில், நாம் சற்று நின்றவண்ணமாக இருக்கலாம். நம் தலைகளை தாழ்த்தலாம். கிருபையும், பரிசுத்தமான பிதாவாகிய தேவனே, நீர் தேவனாய் இருப்பதாலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீர் எங்களுக்கு செய்தவற்றிர்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஆபத்தில் இருந்தபோது எங்களை தப்புவிக்க நீர் வந்ததை எங்களுடைய உள்ளத்தில் இருந்து உம்மை எப்படியாய் பாராட்ட வேண்டும் என்று தெரியவில்லை. கடந்து வந்த காலங்களில் நாங்கள் உம்மை நம்பவும், உம்மை விசுவாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இந்த ஜனங்களின் மேலாக உம்முடைய ஆசீர்வாதத்தை ஊற்றும்படியாக இந்த மத்தியான வேளையில் ஜெபிக்கிறேன். இந்த ஆராதனை முடிவில் எங்கள் மத்தியில் எந்த ஒரு பலவீனமான நாரும் இருக்க வேண்டாம். கர்த்தாவே, எங்கள் மத்தியில் யாரேனும் ஒருவர் தேவனோடு சரியாய் இல்லாமல் இருந்தால், இயேசுவை கல்லறையில் இருந்து உயிர்பித்த அதே வல்லமையானது, அவர்களுடைய அழிவுள்ள சரிரத்தையும், ஆத்துமாவையும் உயிர்பித்து உம்மன்டையில் திரும்பும்படி செய்யும். அதை அருள்வீராக கர்த்தாவே. மேலும், பரிசுத்த ஆவி இல்லாதவர்களுக்கு இந்த நாள் அவர்கள் மறக்க முடியாத மகத்தான நாளாய், தேவன் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் ஊற்றும் நாளாய் இருப்பதாக. கர்த்தாவே, அதை அருள்வீராக. எங்கள் பாவங்களையும் மன்னியும். சகோ. சுல்லிவனை நீர் ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். எங்கள் அன்பான விலையேறப்பெற்ற நண்பர், மக்கள் மேல் அவர் கொண்டுள்ள எண்ணங்களும் தன்னால் முடிந்த எல்லாவற்றைக் கொண்டும் அவர்களுக்கு உதவுவார். நாட்டிலுள்ள எல்லா உழியக்காரர்களையும், சகோ. சுல்லிவனையும் நீர் ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். அவர்களுக்கு நீர் அளவுக்கு அதிகமாய் தருவீராக. இந்த உலகத்தின் இறுதியான மணிவேளையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவர்கள் பிரசங்க பீடத்தில் தைரியமாய் நின்று தேவனுடைய வார்த்தையை அறிவிப்பார்களாக. இந்நேரத்தில் உம்முடைய நண்மைகள் எங்களை சூழ்ந்து கொள்வதாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேம். ஆமோன். நீங்கள் உட்காரலாம். 2இதற்காக நான் ஜனங்களாகிய உங்களுக்கும், தேவனுக்கும் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், சகோ. சலிவன் இதை தன் மீது ஏற்றுக் கொண்டார். பாருங்கள், சகோ. சலிவன் அப்படி செய்வது சரியல்ல. எனவே நாங்கள் அதற்காக ஆயத்தமாக வேண்டியதாகி விட்டது. உங்கள் தயைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது, அன்பின் காணிக்கை... அதை நீங்கள் செய்திருக்க வேண்டியதில்லை. இல்லை, அதற்கு அவசியமேயில்லை. பாருங்கள்... எங்கள் செலவுகள் அனைத்திற்கும் அவர்கள் பணம் செலுத்துகின்றனர் - ஓட்டல், உணவு போன்றவைகளுக்கு. அது மாத்திரமே அவசியம். உங்களுக்கு என் மிகுந்த தயவான: நன்றி. இது மிஷனரிகளுக்கு உதவ அனுப்பப்பட்டு, அவர்கள் ஜனங்களை தேவனிடம் கொண்டு வர ஏதுவாயிருக்கும். இந்த பணத்தைக் கொண்டு சிகரெட்டுகளையோ, விஸ்கியோ வாங்கப் போவதில்லை - தவறான எதுவும் செய்யப்படுவதில்லை. அது சரியான காரியத்துக்கு அனுப்பப்படும். தேவன் தாமே இதை உங்கள் கணக்கில் எழுதி, நீங்கள் இந்த ஆராதனையில் காணிக்கையாகக் கொடுத்த ஒவ்வொரு காசையும், ஒவ்வொருடாலரையும் பத்தாயிரம் மடங்காக உங்களுக்குப் பெருக்கித் தர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 3இங்கு நாம் அமர்ந்து, இந்த ஆராதனைகளை நடத்த இக்கட்டிடத்தை நமக்களித்து உதவிய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தினருக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். என் இருதயப்பூர்வமாக அவர்களுக்கு நிச்சயம் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் கேள்விப்பட்டபடி, சகோ. சலிவன் கூறின விதமாக, எல்லாவற்றிற்கும் பணம் செலுத்தப்பட்டு தீர்க்கப்படும். நாங்கள் இதுவரை ஒரு சென்டு கடனுடன் எந்த நகரத்தையும் விட்டு சென்றதில்லை. எல்லாமே கவனமாக செலுத்தப்பட்டு விடும். அதைத் தவிர வேறெதிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் யாருக்கும் கடன்படக் கூடாது. நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் யாருக்காவது கடன்பட்டிருந்தால், அவர்களிடம் சென்று அதைத் திருப்பிச் செலுத்த சிறிது அவகாசம் கேளுங்கள். பாருங்கள்? எப்பொழுதும் அதுவே மேலான... அது கிறிஸ்தவ மார்க்கத்தின் நல்ல அடையாளம்: உத்தமமாகவும், நேர்மையாகவும் இருப்பதென்பது. 4நீங்கள் எதைக் குறித்து பேசுகின்றீர்களோ, அவ்வாறே வாழ விரும்புகின்றீர்கள். நீங்களே அவ்வாறு வாழாமற் போனால், மற்றவர்கள் அவ்வாறு வாழ்வதற்கு நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்கள் சகல மனிதராலும் வாசிக்கப்படுகின்ற எழுதப்பட்ட நிரூபங்களாயிருக்கிறீர்கள். (2.கொரி;3:2). எனவே, எப்பொழுதும் உத்தமமாயும், உண்மையுள்ளவர்களாயும் இருங்கள். மற்றவரை அது அதிகமாக புண்படுத்தினாலும் உண்மையையே பேசுங்கள். எப்படியாயினும், உண்மையையே பேசுங்கள். ஏனெனில் ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை அவ்வாறே கூற முடியும். நீங்கள் பொய் பேசினால், நீங்கள் கோடிக்கணக்கான மைல்கள் சுற்றிவந்து , மறுபடியும் அந்த பொய்க்கு வரும்படியாக நேரிடும், நீங்கள் பயங்கரமான காரியத்தை செய்து விட்டீர்கள். நீங்கள் உத்தமமாயிருங்கள். நீங்கள் அதை எப்பொழுதும் அதே விதமாகக் கூறலாம். ஏனெனில் அது உண்மையாயுள்ளது. 5வேதாகமும் அதே நிலையில் உள்ளது. வேதாகமம் என்ன கூறுகின்றதோ, அதை அப்படியே கூறுங்கள். முரணானவைகளுடன் ஒப்புரவாகாதீர்கள், அது கூறும் விதமாகவே கூறுங்கள்... அது இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது, உங்கள் விரலை அங்கு சுட்டிக்காட்ட முடியும். அது, அது.... அந்த விதமாகத்தான் நீங்கள் சாத்தானை தோற்கடிக்கின்றீர்கள், சாத்தான் இயேசுவிடம், ''நீர் தேவனுடைய குமாரனேயானால், ஒரு அற்புதம் செய்யும் பார்க்கலாம். நீர் அற்புதங்களைச் செய்கிறவர் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த கற்களை அப்பங்களாக மாற்றும் பார்க்கலாம். நீர் பசியாயிருக்கிறீர், என்றான்.'' அவரோ, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே'' என்றார். பாருங்கள்? அவர் பிதாவின் வார்த்தையை எடுத்துக் கொண்டு பிசாசை அவனுடைய அடிப்படையிலேயே தோற்கடித்தார். நீங்களும் அதே காரியத்தை செய்ய முடியும் - கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு பிசாசை அவனுடைய அடிப்படையிலேயே தோற்கடிக்க முடியும். 6நான் எப்பொழுதும் சகோ. சலிவனுக்கு நன்றியுள்ளவனாயிருப்பேன். இது... இப்படி கூறுவதால் மன்னிக்கவும்: அவர்கள் சகோ. சலிவனை உண்டாக்கிய போது, அவர் மாதிரியை (pattern) தூர எரிந்து விட்டனரென்று எண்ணுகிறேன். அவரைப் போல் யாருமே இல்லை. என் வாழ்க்கையில் நான் சந்தித்துள்ள ஒருவர் எனக்கு சகோ, சலிவனை ஞாபகப்படுத்துகிறார், அவர் தான் ஈஹவார்ட் காடில். சகோ. சலிவனுக்கு அவரைத் தெரியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியாது... சகோ. சலிவனைப் போன்றே ஒரு நாட்டுப்புற மனிதர். அவர் தன் கைகளை தன் ஜேபிகளில் அதிக ஆழமாகப் போடுவதால், கால் சட்டையை பிடித்துக் கொண்டிருக்கும் எலாஸ்டிக் சாதனம் (Suspenders) கீழ்வரை இழுக்கப்பட்டிருக்கும், அவர் தலையை பக்கமாக சரித்துக் கொண்டே பேசுவார். அவர் தான் ஈ ஹாவர்ட் காடில் என்னும் ஒருவர். எனவே சகோ. சலிவனை நண்பனாகவும், கவிசேஷத்தில் சகோதரனாகவும் பெற்றுள்ளதற்காக எனக்கு மிக்க மகிழ்ச்சி. தேவன் தாமே அவரையும், இங்குள்ள அவருடைய சிறு சபையையும், அவருடைய விலையேறப் பெற்ற மனைவியையும், அவருக்கு அருமையானவர்களையும் ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். 7இங்குள்ளமற்ற போதகர்களாகிய உங்களுக்கும், உங்கள் சபையோருக்கும்; முழு சுவிசேஷ பிரசங்கிகளே, வேதத்திலுள்ள சில கருத்துக்களின் பேரில் நம்மிடையே சிறு கருத்து வேற்றுமை காணப்படக்கூடும். என் மனைவியுடன் சில விஷயங்களில் நான் ஒத்துப் போவதில்லை. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவளுக்கு வறுத்த ஆப்பிள் பிடிக்கும், எனக்கு செர்ரி (cherry) பழம் பிடிக்கும், எனவே அவ்விஷயத்தில் எங்களிடையே வேற்றுமை உண்டு. நான் என்னுடையதைக் கொண்டு என்ன செய்கிறேன் என்று உங்களிடம் கூறுகிறேன்: வறுத்த சூடான நல்ல செர்ரி துண்டு எனக்குப் பிடிக்கும் (அதை இப்பொழுது வேண்டுமானாலும் கூட சாப்பிடுவேன்). அதன் மேல் வெண்ணெயை ஊற்றி, அதற்கும் மேல் சர்க்கரையை ஊற்றினால், சகோதரனே, சாப்பிடுவதற்கு ருசியான ஒன்று கிடைத்துவிடும்! என் மனைவிக்கு அதைக்கண்டால் பயம். | அவள் அதன் காலரிகளை (calories) கண்டு பயப்படுகிறாள் என்று நினைக்கிறேன். ஒருக்கால் அவளுக்கு அது பிடித்திருக்கலாம். ஆனால் ஸ்திரீகள் எப்படியென்று உங்களுக்குத் தெரியும், அவர்கள் பருமனாகி விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்களை ஊசியால் இணைத்து, எலும்புவரை அறுக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் மெலிந்து விடுகின்றனர். இருப்பினும், அவர்கள் இன்னும் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். அது அவர்களுடைய இயல்பு என்று எண்ணுகிறேன்... ஆனால் அது எனக்கு மிகவும் பிரியம். அந்த விஷயத்தில் நாங்கள் ஒத்துப்போவதில்லை, மற்ற விஷயங்களில் எங்களிடையே பரிபூரண ஒருமைப்பாடு உண்டு. எனவே சகோதரரே, வேதத்தைப் பொறுத்த விஷயத்தில் அதே போன்று நம்மிடையே உள்ளது. ஆனால் முக்கியமான காரியம் என்னவெனில், நாம் வறுத்த பழம் உண்கிறோம், அது தான் முக்கியம் வாய்ந்தது. முக்கியமாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், கிறிஸ்துவின் வருகை, இன்னும் மகத்தானசு விசேஷக அடிப்படையான வேத உபதேசங்களின் பேரில் நாம் கைகோர்த்து நிற்கிறோம். நாம் ஒன்றாக இணைந்த சகோதரராக, ஸ்தாபன தடை எதுவுமின்றி, நம்மைத் தடுக்க எதுவுமில்லாமல், நாம் ஒரு பெரிய சேனையாக ஒருமித்து கல்வாரியை நோக்கி அணிவகுத்து சென்று, கொண்டிருக்கிறோம். 8உங்களுக்கு நான் எப்பொழுதாவது எந்த விதத்திலாவது உதவியாயிருக்கக் கூடுமானால், அதை செய்ய நான் மகிழ்ச்சி கொள்வேன். நீங்களும் அவ்வாறே என்னிடம் கூறுவீர்கள் என்று நான் உறுதியுடையவனாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் எனக்காக ஒன்றைச் செய்யலாம். அதாவது, நான் தவறு செய்ய தேவன் அனுமதிக்கக் கூடாதென்று நீங்கள் எனக்காக ஜெபிக்கலாம்... நான் தவறு செய்ய வேண்டுமெனும் எண்ணம் என் இருதயத்தில் கிடையாது. நான் சரியாகவே செல்ல விரும்புகிறேன், நான் சரியானதையே செய்ய விரும்புகிறேன். ஏனெனில் ஒன்றை நான் உணருகிறேன். அதாவது, சகோ. மூர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார். அவர், “சகோ. பிரான்ஹாமே நீங்கள் பெற்றுள்ள உங்கள் அனுபவத்தில், நியாயத்தீர்ப்பு நாளன்று உங்கள் இடத்தை வகிக்க நான் விரும்பவில்லை. அப்பொழுது தேவன் உங்களிடமிருந்து பெரியபதிலை எதிர்பார்ப்பார். ஏனெனில் லட்சக்கணக்கான மக்களை அவர் உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்” என்றார். நான் அங்கு நின்று கொண்டு அந்த மக்களுக்காக பதிலுரைக்க வேண்டுமென்று அறிந்திருந்தால், எப்படிப்பட்ட சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்க வேண்டும்? அவர் தமது இரத்தத்தினால் கிரயத்திற்கு கொண்டவர்களை என் கைகளில் பிடித்திருக்கும் போது, நான் எத்தகைய உத்தமத்தைக் கொண்டவனாக இருக்க வேண்டும்? அவர் எனக்கு ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறபடியால்... அது தேவனிடத்திலிருந்து வந்திருக்க வேண்டும், அதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை என்று புத்தியாய் சிந்திக்கும் எந்த மனிதனும் அறிவான். ஒரு குறிப்பிட்ட குழு இவ்வாறு கூறுகின்றது என்பதற்காக, நான் அதைக் கொண்டு யாரையாகிலும், வழித்தவறச் செய்தால், நியாயத்தீர்ப்பு நாளன்று நான் அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டியவனாயிருப்பேன். 9நான் அண்மையில் ஒரு தரிசனம் கண்டு, ஜனங்கள் ஆர்ப்பரிப்பதை கேட்டபோது... சென்ற இரவு அந்த சிறு புத்தகம் உங்களுக்குக் கிடைத்ததா? வர்த்தகனின் சத்தம் என்னும் புத்தகம். அது நல்லது. அந்த தரிசனத்தில் (எப்பொழுதாவது நாங்கள் முழு விவரங்களையும் அச்சிடுவோம், அதில் எல்லா விவரங்களும் இல்லை). அந்த தரிசனத்தை நான் கண்ட போது, இப்பொழுது நான் நின்று கொண்டிருக்கும் விதமாகவே அங்கு நின்று கொண்டிருந்தேன். நான் கட்டிலில் படுத்துக் கிடப்பதையும், என் மனைவியையும் என்னால் காண முடிந்தது. அதே சமயத்தில் நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் இப்படி ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர். நான், ''பவுல், அவன் பிரசங்கித்த சுவிசேஷத்தின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமா?'' என்று கேட்டதற்கு, அவர், ''ஆம்'' என்றார். நான், “பவுல் பிரசங்கித்த விதமாகவே நான் ஒவ்வொரு வார்த்தையும், பிரசங்கித்து வந்திருக்கிறேன்” என்றேன். அப்பொழுது அங்கிருந்த லட்சக்கணக்கானவர்கள், ''அதின் மேல்தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்று ஆர்ப்பரித்தனர். அங்கு நான் கடந்து செல்லும் போது, அப்படித்தான் அது இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், பாருங்கள். அவ்வாறே அது இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், பவுல் பிரசங்கித்தவிதமாக. அதனுடன் ஒன்றைக் கூட்டவோ, அதிலிருந்து ஒன்றை எடுத்துப் போடவோ நான் விரும்பவில்லை. வேதாகமம் என்ன கூறியுள்ளதோ, அவ்வாறே. அது தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் ஜனங்களாகிய நீங்கள் - ஸ்தாபனங்கள் - எல்லா பக்கங்களிலும் அதற்கு விரோதமாக தடைகளை எழுப்புவீர்கள். 10நான் என் சகோதரருக்கு விரோதமாயிருப்பதாக அநேகமுறை சகோதரர் எண்ணுகின்றனர். அது அப்படியல்ல என்று தேவன் அறிவார். உண்மை எதுவென்று அவர் அறிந்திருக்கும் வரைக்கும் எனக்கு ஒன்றுமில்லை. பாருங்கள்? நான் சகோதரருக்கு விரோதமாயில்லை, முறைமைகள் தான் நாம் சகோதரராயிராதபடிக்கு செய்து விடுகின்றன. தேவனுடைய வார்த்தை நாம் சகோதரராயிராதபடிக்கு நம்மை பிரித்து விடுவதில்லை, முறைமைகளே அவ்வாறு செய்கின்றன. அது உண்மை. எனவே, நாம் எதில் நிற்க வேண்டும்? வார்த்தையில் நிற்க வேண்டும். அப்பொழுது தேவன் எல்லா மனிதரையும் அதன் பக்கமாக இழுத்துக் கொள்வார், (அது உண்மை). அதை ஸ்தாபனமாக்கி விடாதீர்கள். அதை தேவனுக்குள் வைத்து, முன்னேறிச் செல்லுங்கள்; அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, முடிவைக் கவனித்து வாருங்கள். தேவன் மற்றவைகளை நிறைவேற்றுவார். 11நீங்கள் எத்தனையோ நல்ல காரியங்களை எனக்கு செய்திருக்கிறீர்கள், அதை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு ஜெபத் துணியை கொடுத்து, அல்லது வேறெதாவதொன்றைச் செய்து உங்களுக்கு உதவியாயிருக்க முடியுமானால் . உபதேசத்தைக் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். ஏனெனில் அதை செய்ய எனக்கு விருப்பமில்லை. அநேகர் விவாகமும், விவாகரத்தும் என்பதன் பேரில் கேள்விகள் கேட்டு எனக்கு எழுதுகின்றனர். அது சபையில் ஒரு சிக்கலான பிரச்சினையாக அமைந்துள்ளது. நான் அப்படிப்பட்டவர்களுக்கு, உங்கள் போதகரைக் கேளுங்கள்'' என்று கூறி அவரிடம் அனுப்பி விடுகிறேன். இங்குள்ள ஜனங்கள் எனக்குக் கடிதம் எழுதி, இதைக் குறித்து என்ன? அதைக் குறித்து என்ன? என்று கேட்டுள்ளனர். நான் அவைகளுக்குப் பதில் எழுதியிருக்கிறேன், அவை உங்களுக்குக் கிடைக்கும். சிறு விஷயங்களுக்கு உங்கள் போதகரை அணுகுங்கள். ஏனெனில், அவர் தான் உங்கள் மேய்ப்பன். பாருங்கள், உங்களைக் கண்காணித்துக் கொள்ள அவர் தேவன் அனுப்பின ஒருவராக இருக்கிறார். எங்களுக்குள் ஒருக்கால் அந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை இருக்கக்கூடும், அப்பொழுது அது உங்கள் சபையில் குழப்பம் விளைவிக்கும். அது நமக்கு வேண்டாம். வேண்டாம்! வேண்டாம்! பாவமான செயல்களையும், வேதத்தில் இல்லாத காரியங்களையும் நீங்கள் விட்டு விலகி தேவனை நோக்கி செல்ல வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். பாருங்கள்? நீங்கள் சிறு சச்சரவுகளை உண்டாக்கினால், அது சபையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே விவாகமும், விவாகரத்தும் என்னும் விஷயத்தில் உங்கள் போதகர் ஆலோசனை கூறுவது நலமென்று எண்ணுகிறேன். இந்த காரியங்களுக்கு, அந்த காரியங்களுக்கு அவர் பதில் கூறட்டும். அவரும் தேவனுடைய ஊழியக்காரர். எனவே அதைச் செய்வதற்கு அவர் தகுதி பெற்றிருக்கிறார். 12காயப்பட்ட மனிதனைக் கண்ட நல்ல சமாரியன் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவன் அவனை சத்திரத்துக்கு கொண்டு வந்து (அது தான் சபை), சத்திரக்காரனிடம் இரண்டு காசுகளைக் கொடுத்து, அவனுக்கு அதிக பணம் தேவைப்பட்டால், அவன் திரும்பிவரும் போது அதைக் கொடுப்பதாகக் கூறினான். எனவே, அவனிடம் இரண்டு காசுகள் உள்ளன. அவன் தேவனுடைய மனிதனாயிருந்தால், அதைக் கொண்டு அவன் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அவன் தேவனுடைய வார்த்தையில் நிற்கும் தேவனுடைய மனிதனாயிருந்தால், தேவன் அவனுக்கு அளித்துள்ளதை அவன் பெற்றிருக்கிறான்: ஆவியும், வார்த்தையும். அது சரியா? நாம் எப்படி அவரைத்தொழுது கொள்ள வேண்டும்? ஆவியோடும், உண்மையோடும் (Truth). வசனமே சத்தியம் (Truth). அது சரியா? 13மறுபடியுமாக மிகுந்த தயையுடன் கூடிய நன்றி செலுத்துகிறேன். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன், இன்று பிற்பகல் மிகவும் களைப்புள்ளவனாக இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இனிமேல் வேறு எந்த ஓட்டலிலும் தங்க மாட்டேன், இரவு பூராவும் மது அருந்தும் விருந்து, கதவுகளைத் தட்டி கூச்சலிடுதல், பெண்கள்... ஓ, நான் இரவு முழுவதும் உறங்காமல் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனவே நான், பெரிய ஓட்டலில் இனி தங்க மாட்டேன். ஒரு சிறு தங்கும் விடுதிக்கு (motel) செல்வேன். நான் என் மோட்டார் வாகனத்தை (truck) கொண்டு வந்து, அதை எங்காவது தரையில் நிறுத்திவிட்டு அதில் உறங்கப் போகிறேன். நான் ஒரு கூடாரத்தையும் உறங்கும் பையையும் (sleeping bag) என்னுடன் கொண்டு வந்து, எங்காவது தனியாக ஒரிடத்தில் தங்கப் போகிறேன். அது உண்மை. 14இந்த தேசம் மிகவும் பாவமுள்ளதாகி விட்டது, அதில் வியப்பொன்றுமில்லை! அது தேன் கூட்டைப்போல் ஆகி உள்ளே வரைக்கும் அழுகியுள்ளது. உங்கள் நாட்டில், வேறொரு இடத்தில்... இந்த நாட்டில் மாத்திரமல்ல, எல்லாவிடங்களிலும். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டிலுள்ள ஒரு பெரிய பட்டினத்தில் நடந்த மத சம்பந்தமான் ஒரு கூட்டத்துக்கு நான் வந்திருந்தேன். அன்றிரவு அந்த மத சம்பந்தமான குழு, வாலிபர்களைக் கொண்ட அந்த வைதீக சபை ஒரு கன்வென்ஷனை நடத்தியது. நான் ஆப்பிரிக்காவில் வூடு (Voodoo) போன்றவைகளைக் கண்டிருக்கிறேன் (ஆப்பிரிக்காவில் செய்யப்படும் ஒரு வகையான மந்திரவாதம் 'வூடு' என்றழைக்கப்படுகிறது - தமிழாக்கியோன்), ஆனால் இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்டதில்லை. அடுத்த நாள் காலையில் (நாம் ஆண்களும், பெண்களும் கலந்தவராக உள்ளபடியால், இதை வெளிப்படையாக கூற இயலாது). அங்கு நடைபெற்ற நடத்தை கெட்ட செயல்கள், தரையில் கிடந்தன. விஸ்கிகுப்பிகள் எங்கும் கிடந்தன. அந்த வாலிப ஆண்களும், பெண்களும் இரவு முழுவதும் ஒன்றாக ஒரே அறையில் இருந்தனர். அடுத்த நாள் காலையில், ''பரிசுத்த பிதா“ அங்கு வீற்றிருக்க. அவர்கள் அவருக்கு முன்பாக வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவரை வணங்கினர். 15எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? எனக்கு என்ன நேர்ந்தது? என்னால் அவைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது... அப்படிப்பட்ட காரியங்களை நான் காணும் போது. ஏதோ ஒன்று என்னை குலுக்கி சுக்கு நூறாக்கி விடுகிறது. அது என் இயேசு கிறிஸ்துவுக்கு பிரதிநிதியாக உள்ள ஒன்றா? குடித்து வெறித்து நடத்தை கெட்ட செயல்களில் ஈடுபட்ட அந்த நடத்தை கெட்ட குழு... வாலிப ஆண்களும், பெண்களும் உடலுறவின் போது உபயோகித்தவை தரைகளிலும், குப்பை கொட்டும் கூடைகளிலும் காணப்பட்டன, மது குப்பிகள்... ஓ, என்னே! அதை நீங்கள் கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்க முடியுமா? உலகம் இத்தகைய பாவமுள்ள நிலையில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. சரி, பாவி அதை காணும் போது, என்ன சொல்லுவான்? (அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள்.) 16அந்தவாலிபப் பெண்கள் அதிகமாக குடித்து விட்டு அவர்களால் நிற்கக் கூட முடியவில்லை. அவர்கள் முழு இரவையும் அந்த பையன்களுடன் அறையில் கழித்தனர். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டிராத ஆபாசமான பேச்சுகள். என் தலையணையை இப்படி என் தலையின் மேல் போட்டுக் கொண்டு உறங்க முயன்றேன். குடித்து, மாடிப்படிகளில் மேலும் கீழும் இப்படி ஓடுதல், பக்தி மார்க்கத்தார்! தங்களை விளையாட்டுக்காரர் என்று அழைத்துக் கொள்ளும் பாவமுள்ள மக்கள் போலிங் (bowling) விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று நான் எதிர் பார்க்கலாம். ஆனால், என் பிள்ளைகளில் ஒருவன் போலிங் விளையாடும் இடத்துக்கு சென்றால், அவனை நாட்டை விட்டே துரத்திவிடுவேன். அதை விளையாட்டு என்று அழைக்கிறார்கள், அது விளையாட்டல்ல. அது... நீங்கள் சரியாக இருக்க விரும்பினால், தேவனுடன் நேராகுங்கள். உண்மை. 17நான் உங்களுக்காக வேதாகமத்திலிருந்து ஒரே ஒரு வசனத்தை படிக்க விரும்புகிறேன். என் பொருளுக்காக நான் படிக்க விரும்பும், இந்த சில வார்த்தைகளை 1.இராஜாக்கள்;17ம் அதிகாரம் முதலாம் வசனத்தில் நீங்கள் காணலாம்; ...என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இரா.17:1. 18உங்களுக்கு எந்த நேரத்திலும் நான் ஜெபத் துணியை அனுப்ப வேண்டுமென்று விரும்பினால், எனக்கு எழுதுங்கள்; இங்கு வந்துள்ள என் செயலாளர், சகோ. மக்கையர். எத்தனை பேர் எங்களிடமிருந்து ஜெபத்துணியைப் பெற்றிருக்கிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள் பார்க்கலாம். சகோ. ஜிம், எழுந்து நில்லுங்கள். நீங்களும், உங்கள் மனைவியும் கூட.இதோ என் கெயலாளரும் அவருடைய மனைவியும். இவர்கள் என்னுடன் பணிபுரிகின்றனர். கூட்டத்திலிருந்து உங்களுக்கு ஜெபத் துணியை அனுப்பும் பையனும், பெண்ணும் இவர்களே. இருவரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். என்னை நீங்கள் தொலை பேசியில் கூப்பிடும்போது நீங்கள் கேட்கும் இனிய குரல் - அதுதான் அங்கு அமர்ந்துள்ள பெண், அவருடைய மனைவி. அவளுடைய தந்தையும், தாயும் இன்று நம்முடன் இங்குள்ளனர். அன்பார்ந்தவர்கள், சுற்றிலும் எல்லாவிடங்களிலும். எனவே... என் வெளி ஊழிய செயலாளரை நீங்கள் அறிவீர்கள், திரு. மெர்சியர். சகோ. லியோ மெர்சியர். அவர் இங்கு எங்கோ உள்ளார், மற்றும் சகோ. ஜீன் கோட் (Gene Goad). எனவே, எந்த தேரத்திலும் நாங்கள் ஜெபத்துணியை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அல்லது எங்களால் செய்யக் கூடிய ஏதாவதொன்று. அல்லது தொலைபேசியில் உங்களுக்கு ஜெபம் செய்ய வேண்டுமானால், நாங்கள் நிச்சயம் செய்வோம். 19இந்த விசித்திரமான தோற்றம் கொண்ட மனிதன், தன் கையில் ஒரு தடியைப் பிடித்துக் கொண்டு, காலடிகள் தளராமல் உறுதியாக இருந்து, அவனுடைய கண்கள் தேவனுடைய மகிமையால் பிரகாசித்து, அவனுடைய தாடி காற்றில் ஒரு பக்கமாக பறந்து, அடர்த்தியான ரோமமுள்ள ஆட்டுத்தோலை அவனைச் சுற்றிலும் சுற்றிக் கொண்டு, காலடி தளராமல் உறுதியாக சமாரியாவுக்குச் செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தான். காண்பதற்கு அவன் ஒன்றுமில்லையென்றாலும், அவன் அந்த மகத்தான தேசமாகிய இஸ்ரவேலுக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருந்தான், ஆம் திஸ்பியனாகிய எலியா கர்த்தருடைய தீர்க்கதரிசி. காண்பதற்கு அவன் ஒன்றுமில்லை யென்றாலும், அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். 20அவன் ராஜாவின் முன்னிலையில் நிற்க பயப்படவில்லை, ஏனெனில் ராஜாவைக் காட்டிலும் பெரியவரின் சமூகத்தில் அவன் இருந்திருக்கிறான், அவன் யேகோவாவின் சமூகத்தில் இருந்திருக்கிறான். எனவே, அவன் எங்கு நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன் நடந்து ராஜாவின் முன்னிலையை அடைந்த போது, அவன் தெற்றிபேசவோ அல்லது திக்குவாய் கொண்டவனாகவோ இல்லை. அவன் எதைக் குறித்து பேசுகிறான், என்பதை அறிந்திருந்தான். அவன் ராஜாவிடம், ''இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது, நான் வரவழைக்கும் வரைக்கும் வானத்திலிருந்து பனியும், மழையும் பெய்யாதிருக்கும்'' என்று கூற முடிந்தது. அவன் ஏன், “நான் வரவழைக்கும் வரைக்கும், என் வாக்கின்படியே என்று கூற வேண்டும்? ஏனெனில், அவனிடம் கர்த்தருடைய வார்த்தை இருந்தது, அவன் ஒரு தீர்க்கதரிசி. தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றிருக்கிறான். 21பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் தேசத்துக்கும், தற்போதைய அமெரிக்காவுக்கும் உள்ள ஒற்றுமை சிறந்து விளங்குகின்றது. இரண்டுமே மகத்தான நாடுகள். இரு நாடுகளுமே நிறுவப்பட்டு, மத சம்பந்தமான துன்புறுத்தலின் காரணமாக ஜனங்கள் அங்கு வந்து குடியேறினர். இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனால் துன்புறுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் அங்கு உண்மையான ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்ள தடை செய்யப்பட்டு, அந்த சிலாக்கியத்தை இழந்தவர்களாயிருந்தனர். அவர்கள் அங்கு அடிமைகளாயிருந்தனர். ஆனால், தேவனோ அவருடைய வேதாகமத்தில் - அவருடைய வார்த்தையில் - தமது தீர்க்கதரிசிகளின் மூலமாக, அவர்களுக்கு ஒரு தேசத்தைத் தருவதாக வாக்களித்திருந்தார். அவர்கள் அந்த தேசத்தில் குடியேறி, அந்த தேசத்தில் வாழ்பவர்களை துரத்திவிட்டு, அதை சுதந்தரமாகப் பெற்றுக் கொண்டனர். அதை செய்ததில் தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. 22அவ்வாறே நம்முடைய மகத்தான தேசமும் கூட. நாம் இங்கு வந்தோம். இந்த தேசம் பிளிமத் கற்பாறையின் மேல் வழிபாட்டின் உரிமை என்னும் அடிப்படையில் நிறுவப்பட்டது, ஏனெனில் நமது முன்னோர்கள் நவீன யேசபேல் முறைமையின் கீழ் நேர்ந்த ரோம மார்க்க துன்புறுத்தலின் காரணமாக ஓடி, வந்து இங்கு அடைந்தனர், அவர்கள் யேசபேலின் தவறான முறைமையின் கீழ் அநேக பெரிய உபத்திரவங்களை அனுபவித்து, இரத்த சாட்சிகளாகவும் மரித்தனர். வேதத்தில் வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தின்படி, தேவன் அவர்களுக்கு ஒரு இடத்தை வாக்களித்திருந்தார். அந்த ஸ்திரீ வனாந்தரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்பட்டாள் (வெளி.12:14). தேவன் அமெரிக்காவுக்கு அல்லது சபைக்கு (அந்த ஸ்திரீக்கு), இந்த தேசத்துக்குள் வருவதற்காக அந்த வாக்குத்தத்தத்தை செய்திருந்தார். 23நீங்கள் வெளிப்படுத்தல் 13ஐ கவனித்தீர்களா? மற்றெல்லா மிருகங்களுமே சமுத்திரத்தை, தண்ணீர்களை விட்டு, எழும்பி வருகின்றன, அந்த தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும், கூட்டங்களும் என்று வெளி.17:17 உரைக்கிறது, (வெளி.17;15 - தமிழாக்கியோன்). ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எழும்பி வரும் போது, அது பூமியிலிருந்து ஜன சஞ்சாரம் இல்லாத இடத்திலிருந்து - எழும்பி வருகிறது. அது எழும்பி வந்தபோது, ஒரு ஆட்டுக் குட்டியைப் போல் காணப்பட்டது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு ஆட்டுக்குட்டிக்கு இரண்டு கொம்புகள் உள்ளன. அது அரசு சம்பந்தமான ஆதிக்கத்தையும், மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் குறிக்கின்றது. அவை ஒன்றாக இணைந்த போது, அந்த ஆட்டுக்குட்டி அதற்கு முந்தி இருந்த வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. அந்த வலுசர்ப்பம் ரோமாபுரி. பிள்ளை பிறந்தவுடனே அதை பட்சித்துப் போடும் படிக்கு வலுசர்ப்பம் ஸ்திரீக்கு முன்பாக நின்றபோது, சிவப்பான வலுசர்ப்பம்... இஸ்ரவேல் என்னும் ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே பிள்ளையைப் பட்சித்துப் போடும் படிக்கு அதற்கு முன் நின்று, துன்புறுத்தலை அனுப்பி, இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளையெல்லாம் கொன்று போட்டது யார்? வலுசர்ப்பமாகிய ரோமாபுரி. ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அவளுக்கு முன் நின்றது. (வெளி.12:4) 24பின்பு நாம் காண்கிறோம், இந்த நாடு சுயாதீனமுள்ள நாடாக வளர்ந்து வந்ததென்று அதற்கு ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது, அதாவது தேவ ஆட்டுக்குட்டி. ஆனால் சிறிது காலம் கழிந்து, நாம் பெற்றுள்ள அதே முறைமை, வலுசர்ப்பத்தைப் போல் பேசி, அதற்கு முந்தி இருந்த வலுசர்ப்பத்தின் அதிகாரம் முழுவதையும் நடப்பித்தது. அவை ஒன்றுக்கொன்று இணையாக பிழையின்றி அமைகின்றன. ஞாபகம் கொள்ளுங்கள், இவை... இஸ்ரவேல் வந்து தன் சொந்த நாட்டையும், பாலஸ்தீனாவையும் கைப்பற்றி, அந்த நாட்டில் வாழ்ந்தவர் அனைவரையும் துரத்திவிட்டு, அதை சொந்தமாக்கிக் கொண்டது. அப்படி செய்ய தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. உரிமையை — வழிபாட்டின் உரிமையை விரும்பி தேவனை சேவிக்க எண்ணமுள்ள ஒரு சிறு கூட்டத்தாரின் மூலம் தேவன் என்ன செய்ய முடியும் என்பதை உலகிற்கு காண்பிக்க சித்தம் கொண்டார். 25தேவன் இஸ்ரவேலுக்கு என்ன செய்தார்? அவர் இஸ்ரவேலை உலகிலேயே மிகவும் மகத்தான தேசமாக செய்தார். அது தேவனுடைய சித்தத்தை விட்டு விலகிச் செல்லும் வரைக்கும் அவ்வாறே இருந்தது. அவர் அமெரிக்காவுக்கு என்ன செய்தார்? அது தேவனுடைய சித்தத்தை விட்டுவிலகிச் செல்லும் வரைக்கும், தேவன் அதை உலகிலேயே மிக மகத்தான தேசமாக வைத்திருந்தார். இரண்டும் அப்படியே இணையாக உள்ளன. இஸ்ரவேல் தன் நாட்டில் இருந்த போது, அது மகத்தான ஜனங்களையும் மகத்தான தலைவர்களையும் கொண்டதாயிருந்தது. தாவீது, சாலொமோன் போன்ற தேவனுக்கு பயந்தவர்கள் ஆட்சி செலுத்தினர். முழு உலகமே அவர்களைக் கண்டு பயந்தது. அவர்கள் யுத்தம், தொல்லை எதுவுமின்றி சமாதானமாக தேவனுடைய வல்லமையின் கீழ் வாழ்ந்து வந்தனர். உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் ஜனங்கள் அவர்களைக் காண வந்தனர். தேவன் அவர்களுக்கு சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தை அளித்திருந்தார், அது சாலொமோனின் மேல் தங்கியிருந்தது. தென்தேசத்து ராஜ ஸ்திரீ... சாலொமோனின் ஞானத்தைக் கேட்க, சேபாவின் ராணி பிரயாணம் செய்து சகாரா பாலைவனத்தைக் கடந்து வந்தாள் (அவளுக்கு மூன்று மாதங்கள் பிடித்தது). சாலொமோனால் ஆவிகளைப் பகுத்தறிய முடிந்தது என்றும் அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்த இரகசியங்களை அவனால் கூற முடிந்தது. என்றும் அவள் கண்டபோது, அவள், ''உம்மைக் குறித்து நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையே; அதைக்காட்டிலும் அதிகமாகவே உள்ளது'' என்றாள். அது தேவன் என்று அவள் உறுதி கொண்டாள். 26அமெரிக்காவும், அதன் முன்னோர்கள் வழிபாட்டின் உரிமைக்காக இங்கு வந்த போது... அந்நாட்களில் தேவ பக்தியுள்ளவர்கள் தலைவர்களாக இருந்தனர்: ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன் போன்ற பிரசித்தி பெற்ற பண்புடையவர்கள், தேவனுடய மனிதர்கள். அந்நாட்களில் அமெரிக்கா, அமெரிக்காவாக இருந்தது. வாலிஃ போர்ஜில் (Valley Forge), ஜார்ஜ் வாஷிங்டன்: அவர் டெலாவேரைக் (Delaware) கடக்கும் முன்பு, பனிக்கட்டியில் முழங்கால் படியிட்டு இரவு முழுவதும் ஜெபம் செய்த காரணத்தால், அவருடைய இடுப்பு வரை நனைந்துவிட்டது. அடுத்த நாள் காலை அமெரிக்க சேனை கடந்து செல்லத் தொடங்கின போது, அவர்களில் இருபது சதவிகிதம் பேருக்கு மாத்திரமே அணிந்து கொள்ள காலணிகள் இருந்தன, ஆனால் அவர்களுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர்கள் ஒரு நோக்கத்துக்காக சண்டை செய்ய வேண்டியதாயிருந்தது. என்ன வந்தாலும், போனாலும் அவர்கள் கவலை கொள்ளவில்லை (விவசாயிகள் உழுவதை நிறுத்தி விட்டு, காளையை அவிழ்த்துவிட்டு, துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு, அவர்கள் அறிந்திருந்த சுதந்தரத்துக்காக போர் புரியச் சென்றனர்). அடுத்த நாள், நான்கு அல்லது ஐந்து தோட்டாக்கள் அவருடைய கோட்டையும், தொப்பியையும் துளைத்து சென்றன, ஆனால் அவருக்கு ஒன்றும் ஏற்படவில்லை என்று நான் கேள்விப்பட்டேன். இந்த நாட்டை நிறுவின தேவனுடைய மனிதர்கள், மகத்தானவர்கள்! அவர்கள் இப்படி எழுதினதில் வியப்பொன்றுமில்லை: நமது நாடு சுதந்தரத்தின் பரிசுத்த வெளிச்சத்தால், நீண்ட காலம் பிரகாசிப்பதாக! மகத்தான தேவனே, எங்கள் ராஜாவே உமது பலத்தால், எங்களை காத்துக்கொள்ளும். 27சில நாட்களுக்கு முன்பு நான் இந்தியானாவிலுள்ள காரிடனில் ஒரு முதியோருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம், தலை நகரம் காரிடனில் இருந்த போது... ஆளுநர் பேசுவதைக் கேட்க அவர் எப்படி காளை மாட்டு வண்டியில் செல்வது வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கும் ஆளுநருக்கும் மாத்திரமே, அப்பொழுது 'சூட்' இருந்ததாம். அவர் ஆடுகளை வளர்த்து, மயிரைக் கத்தரித்து, ஆட்டு ரோமத்தை கழுவுவார் என்றும், அவருடைய சகோதரிகள் அதை நெய்து, அவருடைய கால் சட்டைக்கு ஏற்றாற் போல் ஒரு 'கோட்' தைத்து கொடுத்ததாகவும் கூறினார். எண்பத்தைந்து அல்லது தொண்ணூறு வயது நிரம்பிய அந்த வயோதிபர் இப்படி தன் தாடியை வருவிக் கொண்டே, பில்லி, அது அமெரிக்கா அமெரிக்காவாக இருந்தபோது“ என்றார். நான் அந்த வயோதிபரை உற்று நோக்கினேன். ''இந்த வாலிபரில் அநேகர் அதை நம்பமாட்டார்கள், ஆனால் நீர் கூறுவது உண்மையே'' என்று எண்ணினேன். 28தேவபக்தியாய் தொடங்கின இஸ்ரவேலுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் எதற்கும் கவலை கொள்ளாதவர்களாகத் தொடங்கி விட்டார்கள். என்ன நடந்தாலும் கவலையில்லை என்னும் நிலைக்கு அவர்கள் வந்து விட்டனர். தேவனை வழிபடுவதில் அவர்கள் அசதிக்கொள்ளத் தொடங்கினர். ஆனால் நாம் பெற்றுள்ளது போன்ற ஒரு வகையான மார்க்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்தவர்களாய் இருந்தனர்; அவர்கள் ஜனங்களிடம் சகஜமாக பழக ஆரம்பித்ததால், அவர்கள் வெவ்வேறான வழிபாட்டு முறமைகளை சபையில் புகுத்தினர். பாகாலின் வழிபாடு சபைக்குள் நுழைந்து, இஸ்ரவேல் ஜனங்கள் இன்பத்தின் மேல் பைத்தியமுள்ளவர் ஆளாகி, குடித்து வெறித்து, முடிவில் தேவனை அறியாத ஒருவனை தலைவனாக அமர்த்தினர்: அவன் தகப்பனுக்குப் பின்னால் சிங்காசனத்துக்கு வந்த ஆகாப். அவனுடைய தகப்பனாரும் தேவனற்ற ஒருவன், பணக்காரன், ஆனால் தேவனற்றவன். இவன் தனக்கு முன்பிருந்த எல்லோரைக் காட்டிலும் அதிக பாவங்களைச் செய்தான். ஆனால் இஸ்ரவேலரோ, தங்கள் குடிவெறியில், அப்படிப்பட்ட ஒருவனை தங்கள் மேல் ஆட்சி செய்ய சிங்காசனத்தில் அமர்த்தினர். அது பரவாயில்லையென்று அவர்கள் எண்ணினர். இன்று அமெரிக்கர்கள் செய்வது போலவே. ''அதனால் என்ன? அவர் நல்ல அரசியல்வாதி. அவர் நல்ல அரசியல்வாதி என்பதால், அதனால் ஒன்றுமில்லை.'' 29இன்றைய அமெரிக்கர்களில் பெரும்பாலோர், அமெரிக்கன் என்னும் தங்கள் பிறப்புரிமையை விற்றுப்போட்டு, ''அரசாங்கத்தினிடமிருந்து ஒரு சில டாலர்கள் கூடுதலாகப் பெற்றுவாழும் வரைக்கும், அதனால் ஒரு வித்தியாசமுமில்லை“ என்கின்றனர். அவர்கள் தங்கள் வயிற்றுக்காகவும், இச்சைகளுக்காகவும், பாவமுள்ள உலகத்தின் பேரிலுள்ள ஆசைக்காகவும் விற்றுப்போட்டு, நாம் பிளிமத் கற்பாறையில் எதற்காக இறங்கினோமோ, அந்த நோக்கத்தையே மறந்து விட்டனர். அவர்கள் நமது சுதந்தரத்தை மறந்துவிட்டு, இன்பத்தின் மேல் பைத்தியமாயுள்ள கூட்டத்துக்கு தங்களை விற்றுப் போட்டனர். இஸ்ரவேலின் நாட்களில் நடந்தது போல, இப்பொழுதும் நடந்து வருகிறது. அமெரிக்கா அதே பாதையில் சென்று கொண்டிருக்கிறது, இன்பம் (Pleasure). 30சிறிது கழிந்து, அரசாங்கம் பாவத்துக்கு ஆமோதம் தெரிவித்தது. யூத ஜெப ஆலயம் ஒன்றிருக்கும் வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்? அமெரிக்காவும் அதையே செய்துள்ளது. நாமும் நம்மை ஸ்தாபித்துக் கொண்டு, சிறு குழுக்களை உண்டாக்கி, நாளுக்கு நாள் அதிக பாவமுள்ளவர்களாகிக் கொண்டு வருகிறோம். நாம் மாத்திரம், இங்கு நாம் எந்த நோக்கத்திற்காக வந்து சேர்ந்தோமோ, அந்த நோக்கத்தில் நிலை நின்றிருந்தால்! இஸ்ரவேலில் நடந்தது போல், இங்கும் பாவம் சபைகளுக்குள் நுழைய ஆரம்பித்தது. ஸ்திரீகள் தலைமயிரைக் கத்தரிக்கவும், நடத்தை கெட்ட ஆடைகளை அணியவும் தொடங்கினர், ஒவ்வொரு ஆண்டும் ஆடை குறைந்து கொண்டே! வருகிறது. ஆண்களும் இதை அதை மற்றதை செய்து, சபைகளில் சீட்டு விளையாடி, சூதாடி, அவர்களால் கூடுமானவரை உலகப்பிரகாரமாக, இன்பம் அனுபவிப்பவர்களாக, குடித்து வெறிப்பவர்களாக ஆகிவிட்டனர். 31போதகர்கள் வேத கல்லூரியில் பட்டம் பெற்று. வெளியே வருகின்ற போது, பேராயர் அவர்களிடம், ''நீங்கள் என்ன வேண்டுமானாலும் பிரசங்கம் செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரையில், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலர்ந்து விட்டது'' என்கிறார். சபையானது ஒரு ஸ்தாபனமாக, ஒரு விடுதியைப்போல் ஆகிவிட்டது. உலகக் காரியங்கள் உள்ளே நுழைந்து விட்டன, ஆகாபின் நாட்களில் அவர்கள் செய்தது போல போதகர்கள் ஒத்துப் போகின்றனர். அது பாவமுள்ளதாகி, உள்ளே வரைக்கும் அழுகிப்போய், இப்படியாக அது போய்க் கொண்டேயிருக்கிறது. தேவன் அவர்களுக்கு தீர்க்கதரிசிகளை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி, மிகுந்த இரக்கங் கொண்டு ஜனங்களிடம் கெஞ்சின போதிலும், அவர்கள் அதற்கு புறமுதுகு காட்டினர். அவர்கள், தங்கள் சொந்த வழியை விரும்பினர். அவர்கள் இஸ்ரவேலர், அவர்கள் சுயாதீனமுள்ளவர்கள். அவர்கள் ஒரு மகத்தான தேசத்தை சேர்ந்திருந்தனர். அவர்களுடைய முற்பிதாக்கள். இன்னின்னதை செய்தனர். (தாவீதும், சாலொமோனும்) அவர்கள் விருப்பப்படி செய்யலாம். நாமும் நம்மை அதே. அடிப்படையில் நிறுத்தியுள்ளோம்; வாஷிங்டனும், மற்ற நம்முடைய முன்னோர்களும் எதற்காக நின்றனரோ, அதன் அடிப்படையில். ஆனால் சகோதரனே, நாம் அதிலிருந்து லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளோம். நமது சபைகளும் லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன... 32நீங்கள் இன்றைய மெதோடிஸ்டு சபையை ஆராய்ந்து பார்த்து, முன்பு மெதோடிஸ்டு சபை! எப்படியிருந்தது என்பதுடன் அதை ஒப்பிட்டு நோக்குங்கள். பெந்தேகொஸ்கே சபை இன்று எவ்வாறுள்ளதென்றும், முன்பு எப்படியிருந்ததென்றும்! பாப்டிஸ்டு சபை இன்று எவ்வாறுள்ளதென்றும், முன்பு எவ்வாறிருந்ததென்றும்! ஜான் ஸ்மித், மற்றும் முன்பிருந்த சீர்திருத்தக்காரர்களின் காலத்துக்கு சென்று காண நமக்கு நேரமிருந்தால்! ஜான் ஸ்மித் மரிக்கும் முன்பு, மெதோடிஸ்டு பெண்கள் தங்கள் விரல்களில் தங்க மோதிரங்களை அணிவது மிகவும் மோசமான செயல் என்று கூறினார். மெதோடிஸ்டுகள்! இன்றைய மெதோடிஸ்டு பெண்கள் தலைமயிர் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வாணம் தீட்டிக் கொண்டு, குட்டைக் கால் சட்டை அணிந்திருப்பதை அவர் காண்பாரானால் என்ன சொல்லுவார்? அது பாவத்தின் காரணமாகவே. தேவன் அமெரிக்காவில் என்ன செய்தார்? எழுப்புதலை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பிக் கொண்டேயிருந்தார். போதகர்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, ஜனங்களை தேவனிடம் மறுபடியும் அழைக்க முயன்றனர். ஆனால் ஜனங்கள் என்ன செய்தனர்? இஸ்ரவேல் செய்தது போலவே அவர்களும் அதை இகழ்ந்து, அவர்களைப் பார்த்து கேலி செய்தனர். அவர்களை, ''உருளும் பரிசுத்தர்'' என்றழைத்தனர். அவர்களை சிறையிலிட்டனர். 33இன்று சபையில் உள்ள என் சகோதரிகளில் ஒருத்தியும் என் சகோதரரில் ஒருவரும் சென்ற இரவு அந்த ஓட்டலில் நின்று கொண்டு, கைகளையுயர்த்தி, தேவனைத் துதித்து அந்த அறையில் சத்தமிட்டிருந்தால், அதற்காக இன்று அவர்கள் சிறையில் இருப்பார்கள். ஆனால் குடித்து' வெறித்த மூடரான, ''உருளும் அசுத்தர்கள்'' அங்கு நின்று கொண்டு இரவு முழுவதும் சத்தமிடலாம்; அவர்கள் குடித்து, கொஞ்சி, பெண்களின் உடைகளை அவிழ்த்து, தரையில் விழுந்து இரவு முழுவதும் கூச்சலிட்டாலும், அதை எதிர்த்து ஒரு வார்த்தையும் கூற அவர்களால் முடியவில்லை. தேவனுடைய கரங்களின் கீழ் நாம் அழிவுக்கு நியமிக்கப்பட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. 34கவனியுங்கள், அவ்வப்போது தேவன் ஊழியக்காரர்களை அனுப்பி, அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து தமது வார்த்தையை நிரூபித்தார். ஆனால் பெரும்பாலும், நவீன குருவானவர்களில் அநேகர் அதை புறக்கணித்து. ஒவ்வொரு எழுப்புதலையும் கேலி செய்தனர். கிறிஸ்துவின் சபை என்று அழைத்துக்கொள்ளும் சபையும் மற்ற சபைகளும் அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்றன. சேவனுடைய அந்த சிறு மீதியானவர்களை இது அடையாத 10க்கு தடுத்து நிறுத்ததங்களால் ஆனவரை முயன்றன இஸ்ரவேலில் நடந்தது போல், இன்று நடக்கிறது. அநேக சமயங்களில், கேவன் தமது ஜனங்களை ஸ்தாபனங்களிலிருந்து வெளியே எடுத்து, அவர்களை வனாந்தரத்துக்கு கொண்டு சென்று அவர்சளுடன் பேச வேண்டியதாயிற்று, அவருக்கு மீதியான ஒரு கூட்டம் இருக்கப் போகின்றது, அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள் அப்பொழுது அவர் செய்தார், இப்பொழுதும் அவர் செய்வார். அவர்கள் தொடர்ந்து பாவத்தின் வழியாக நடந்து சென்றனர். ஏன்? அவர்களைத் தடுத்து நிறுத்த தலைவர்கள்யாருமில்லை. 35நான் உண்மையைக் கூறுகிறேன், எனக்கு அநேக நாடுகளைக் தெரியும். அமெரிக்காவில் பெண்கள் உடையுடுத்தி தெருக்களில் நடந்து செல்வது போல், வேறெங்காகிலும் அவர்கள் நடந்து செல்வதைக் காண நேர்ந்தால், அவர்களை சிறையிலிடுவார்கள். ரோமாபுரியிலுள்ள செயின்ட் ஆஞ்சலோவுக்கு நான் சென்றிருந்த போது (சற்று யோசித்து பாருங்கள்) இது எவ்வளவு இழிவானதென்று, செயின்ட் ஆஞ்சலோவின் கல்லறைக்குச் செல்லும் வாசலில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: ''அமெரிக்க பெண்களுக்கு, தயவு செய்து உடைகளை அணிந்து மரித்தோரை செளரவியுங்கள்.'' உங்களுக்கு ஏதாகிலும் குமட்டல் உண்டாக்கினால், அது அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கூட்டத்தினர் உள்ளே வருவதே. ஒருநாள் நான், லூசர்னில் உட்கார்ந்து கொண்டு நானும் சகோ. ஆர்கன் பிரைட்டும் - 'ஸ்டீக்' (steak) சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு பரிமாறப்படும் உணவு மிகவும் ருசியாயிருந்ததால், நாங்கள் இருவரும் அங்கு சென்றோம். அங்கு எனக்கு தண்ணீர் கிடைத்தது. சாதாரணமாக திராட்சை ரசத்தை (wine) தவிர வேறொன்றையும் அவர்கள் தருவதில்லை. எனவே, நான் எப்பொழுதுமே ஒரு குப்பி தண்ணீரை என் அக்களத்தில் வைத்துகொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் மேசையில் தண்ணீர் வைப்பதில்லை. நான் அங்கு சென்றிருந்த போது, ''குமாரி அமெரிக்கா'' உள்ளே வரும் வரைக்கும் எல்லாமே நன்றாயிருந்தது. அவள் அசுத்தமான, கூர்மையான மூக்கு கொண்ட ஒரு சிறு 'பூடுல்' (poodle) நாயுடன் உள்ளே நுழைந்தாள். அவள் மலிவான ஆபரணங்களை அணிந்திருந்து, வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, தான் யாரோ மிகப் பெரியவள் போல் காண்பித்துக் கொண்டிருந்தாள். அந்த அசுத்தமான, 'பூடுல்' நாயை அவள் மேசையின் மேல் உட்காரவைத்தாள். 36அசுத்தமான, அருவருப்பான, காரியம். தேவனுடைய பார்வையில் நாய் மிகவும் மோசமான. ஒன்றாக உள்ளது. அவைகளுடைய தசமபாகத்தை தேவனுடைய வீட்டில் கொண்டு வரக்கூடாது (உபா.23:18). அது வேசியைப் போன்றது, அது ''வேசியின் தசமபாகம்“ என்று வேதம் கூறுகிறது. இருப்பினும், அவர்கள் செய்வதைப் பாருங்கள். அவர்கள் குழந்தையை பெறாதபடிக்கு குடும்பக் கட்டுப்பாட்டைகைக் கொண்டு, அதே சமயத்தில் ஒரு நாயை வாங்க ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதை இரவு பூராவும் வெளியில் கொண்டு சென்று, குழந்தையிடம் காண்பிக்க வேண்டிய அன்பை அதனிடம் காண்பிக்கின்றனர். அழிவைத் தவிர வேறென்ன காத்துக் கொண்டிருக்கிறது? ஒருக்கால் என் சத்தத்தை நீங்கள் மறுபடியும் கேட்காமல் போகலாம். ஆனால், நீங்கள் இதை நினைவில் கொள்ள விரும்புகிறேன். நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். 37அங்கு என்ன நடந்ததென்று நாம் காண்கிறோம். முடிவில் அந்த மகத்தான நேரம் வந்தது. ஆகாப் தேர்ந்தெடுக்கப்பட்டான். அப்பொழுது அவன் யேசபேலை மணந்தான். இஸ்ரவேலர் அனைவரையும் விக்கிரகாராதனைக்கு வழி நடத்திய மோசமான ஸ்திரீ அவளே. இஸ்ரவேலர் அனைவரும் அப்பொழுது விக்கிரகங்களை வழிபடத் தொடங்கினர். அவர்களுடைய தேசத்துக்கு இப்படிப்பட்ட ஒரு காரியம் நடக்க அவர்கள் அனுமதித்த காரணத்தால், அவர்கள் பின்வாங்கிப் போன நிலையில் இருந்திருக்க வேண்டும். சட்டங்கள் ஜனங்களாலே ஜனங்களுக்காக உண்டாக்கப்பட்டன. நாமும் அதையே செய்துள்ளோம்! ஒருகாலத்தில் அமெரிக்கா... இரத்த சாட்சிகளின் இரத்தத்தைக் குடித்து (அவர்களை அவள் கொன்றாள்) அதனால் வெறி கொண்டிருக்கிற அந்த பழைய வேசியை உள்ளே விடக்கூடாது என்று அமெரிக்கா ஒரு காலத்தில் அறிந்திருந்தது... அவர்கள் இந்நாட்டுக்கு ஓடி வந்த காரணமே மதசம்பந்தமான உரிமைக்காகவே. அவர்கள் இப்படிப்பட்ட ஒன்றை பொறுத்திருக்க மாட்டார்கள். ஆனால் அதை தேர்ந்தெடுத்ததன் மூலம், இப்பொழுது நாம் பின்வாங்கிப் போன நிலையில் இருக்கிறோம் என்பதை அது காண்பிக்கிறது - முழு தேசமும் (கத்தோலிக்கரான கென்னடியை அமெரிக்கர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததை தீர்க்கதரிசி இங்கு குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). ஆனால் 'டெமோகிராட்' (Democrats) வகுப்பைச் சேர்ந்த உங்களில் சிலர், ''ஓ, அவர் ஒரு நல்ல அரசியல் தலைவனாக இருப்பார்'' என்று எண்ணக்கூடும். அது மாமிசப்பிரகாரமான சிந்தைக்கு, யோசனைக்கு சரியாகத்தென்படலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கும் ஆவிக்குரிய சிந்தைக்கும், அது மூடத்தனமான செயலாகத் தோன்றுகிறது. நிச்சயமாக - வரிகளில் சில டாலர்கள் குறைத்தல் போன்றவையே முக்கியமாகிவிட்டது. சுவிசேஷ ஊழியத்தில் இன்று ஈடுபட்டுள்ள நமது மிஷனரிமார்களுக்கு அது கடினமாகிவிட்டது. ஏனெனில் நாம் ஒரு கத்தோலிக்க தேசமாக கருதப்படுகின்றோம். நிச்சயமாக, ருஷியா ஒரு கம்யூனிஸ்டு தலைவனைக் கொண்டிருப்பதால், அது கம்யூனிஸ்டு நாடாக கருதப்படுகின்றது. சிகப்பு சீனாவும், கம்யூனிஸ்டு தலைவனைக் கொண்டிருப்பதால் கம்யூனிஸ்டு நாடாக கருதப்படுகின்றது. நாம் கத்தோலிக்கர் ஒருவரை தலைவனாக கொண்டிருப்பதால், கத்தோலிக்க நாடாக கருதப்படுகின்றோம். 38ஓ, ஆகாப் சிங்காசனத்தின் மேல் இருந்த போது... நீங்கள், ''ஆகாப் தான் சிங்காசனத்தின் மேல் இருந்தான்'' என்கிறீர்கள். அது உண்மை தான், ஆனால் யேசபேலே அந்த சிங்காசனத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு தலைவியாயிருந்தாள். அவள் தான் எல்லாவற்றையும் நடத்தினாள். அவள் எப்படி நாட்டின் சட்டதிட்டங்களை தன் இலாபத்துக்காகவும், பேராசைக்காகவும் மாற்றி அமைத்து, அவள் ஆகாபை மணந்திருந்ததால், அவன் அதை செய்யும்படி செய்தாள் என்று பாருங்கள்! இன்றைய நமது தலைவரும் அப்படித்தான். அவர் நல்லவர் அல்ல என்று நான் சொல்லவில்லை, ஆனால் அவருக்கு பின்னால் என்ன உள்ளது என்பதைப் பாருங்கள்: அந்த வேசி, நாம் எதற்காக அமெரிக்காவில் தங்குவதற்காக ஓடி வந்தோமே அதுவே; எந்த கொள்கைகளின் மேல் அமெரிக்கா கட்டப்பட்டுள்ளதோ. நாம் நமது சொந்த விருப்பத்தினால், அப்படிப்பட்ட ஒன்றை தேர்ந்தெடுத்தோம். என் சத்தம் விரைவில் ஏன் நிறுத்தப்படப் போகிறது என்பதை உங்களால் காண முடிகிறதா, யாராகிலும் ஒருவர் அறிந்துகொள்ளப் போகின்றார்! ஆம்! ஏன்? வெளி;2:20ல் அவள் தன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்கிறாள். பாவம் அலை போல் நடந்து வருகிறதை கவனியுங்கள். நவீன, தேவனுக்கு விரோதமான செயல்கள் சபைகளில் நடப்பதைக் கவனியுங்கள். ''முடிவில் உபத்திரவம் உண்டாகும்'' என்று வேகம் கூறுகிறது. ''இது கர்த்தர் உரைக்கிறதாவது!'' நிச்சயமாக உபத்திரவம் உண்டாகும். 39அப்பொழுது என்ன நடக்கப்போகிறது? முன்பு எப்படியிருந்ததோ, அப்படியே இப்பொழுதும் இருக்கும். அவளே பின்னால் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினாள். அவளே கட்டுப்படுத்தினாள். அது 17ம் அல்லது 18ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். அதை படித்துப் பாருங்கள். யேசபேல் என்ன செய்தாள் என்று நீங்கள் காண்பீர்கள். அவள் எப்படி ஆகாபை தன் வசப்படுத்திக் கொண்டாள் என்று. அவனால் அதைக் குறித்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவள் அவன் மனைவி. அப்படியானால் ஒரு தேசம் எதன்மேல் கட்டப்பட்டிருந்ததென்று பாருங்கள், பின்வாங்கிப் போன ஒரு இஸ்ரவேலனும், அவனுக்கு ஆதரவாக பாகாலை வழிபடும் ஒரு அஞ்ஞான மனைவியும். அவள் என்ன செய்தாள்? அவள் எல்லாவற்றையும் நவீனமாகவும், அழகாகவும் செய்து, ஜனங்களுக்கு அது கலபமான முறையாக அமைந்திருந்ததால் சபை முழுவதும், போதகர்களும், எல்லோருமே அதனால் கவரப்பட்டனர், ''நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன்'' என்று எலியா கூறவில்லையா? அன்று எட்டியிருந்ததோ, அதற்கு இணையாக இன்றும் உள்ளது. 40அவர்கள் எல்லோருமே ஏதாவதொன்றைக் கூற பயந்தனர். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது அல்லவா? அவர்கள் ஒன்றைக்கூற பயந்தனர். எனவே நாம் காண்கிறோம், அவர்கள் நிலை தளர்ந்து, ஒழுக்காற்று, குடித்து, இன்பத்தின் மேல் நாட்டம் கொண்டு, இன்றுள்ளது போல் காணப்பட்டனர், யேசபேல் வேத வாக்கியங்களை திரித்து... அவள் என்ன செய்தாள்... அவள் நியாயப்பிரமாணங்களை திரித்தாள். யேசபேல் ஜனங்களை தன் கீழ் அடக்க, அவளை ''தீர்க்கதரிசினி'' என்றும், அவள் ஒருவள் மாத்திரமே, ''பூமியில் தேவனுடைய சத்தம்'' என்றும் கூறிக் கொண்டாள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உலகம் உள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அவள் மாமிசப்பிரகாரமான சிந்தையை நம்பப்பண்ணுவாள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெண் வழிபாடு வரும், அது மரியாளாக இருக்கும். அதை நான்.... 1931ல் கண்டேன். ஏழு சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. நான் 1931ல் எழுதின இந்த தாள் இங்கே என்னிடம் உள்ளது, “எவ்வாறு ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் முழு உலகமே யுத்தத்தில் ஈடுபட காரணமாயிருப்பார்'' என்று நான் கூறினேன். நான் அப்படி கூறினபோது, யுத்தம் எதுவும் நடக்கவில்லை, அது பணக்கஷ்டக் காலமாயிருந்தது. நான், ''வேறொரு காரியம்...'' என்று கூறினேன். 'டிமாக்ரட்' கோஷ்டியை முழுவதுமாக ஆதரித்த என் தாய், அப்படி நான் கூறிய போது, என்னை முறைத்துப் பார்த்தார்கள். நான் அது ரிப்பப்ளிக்கன் அல்லது சோஷலிஸ்ட் கோஷ்டி அல்லது எந்த கோஷ்டியைச் சேர்ந்தவராயிருந்தாலும் சரி, இது கர்த்தர் உரைக்கிறதாவது. இப்படி அவர்கள் செய்வதனால, அவர்கள் பெண்கள் வோட்டு போட அனுமதிக்கின்றனர். அப்படி அவர்கள் செய்யும் போது, அது இந்த நாட்டுக்கு நேரிடும் மிகப்பெரிய அவமானமாயிருக்கும்'' என்றேன். நான் மேலும், ''அதன் பலனை அவர்கள் என்றாவது ஒரு நாள் அனுபவித்தேயாக வேண்டும்'' என்றேன். சென்ற தேர்தலின் போது அப்படி நடந்தது. இந்த ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தது பெண்களே. 41தென்பாகத்திலுள்ள விலைமதிக்க முடியாத கறுப்பு ஜனங்களே, நீங்கள் எப்படி வோட்டு போட்டீர்கள்! ''பிரசங்க பீடத்திலிருந்து நீங்கள் அதை கூற வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை'' என்று நீங்கள் கூறலாம். எனக்கு கூற உரிமையுண்டு. ஆமாம், அது தேவனுடைய வார்த்தை! உங்களுக்கு விடுதலையை வாங்கித் தந்த ஆபிரகாம் லிங்கனின் கறை, அவர் அந்த பொருட்காட்சி சாலையில் ஒரு ஸ்திரீயின் மார்பகத்தின் மேல் படுத்துக் கொண்டிருக்கிறார். நீங்களே உங்கள் பிறப்புரிமையை விற்றுப் போடுகிறீர்கள். உங்களுக்கு அவமானம். ஜனங்களாகிய நீங்கள், அரசியலுக்காக, நீங்கள் ஒரு நல்ல 'டிமாக்ரட்' என்பதற்காக அப்படிப்பட்ட ஒன்றுக்கு வோட்டு போட்டு, அமெரிக்கத்துவம், கிறிஸ்துவ மார்க்கம் என்னும் உங்கள் பிறப்புரிமைகளை விற்றுப்போட்டு, இந்த நாட்டுக்கு நாம் ஓடிவரக் காரணமாயிருந்த, அந்த வேசியின் கையில் அதைக் கொடுத்தீர்கள். அவள் எவ்வளவு மெதுவாக உள்ளே நுழைகிறாள் என்பதைப் பாருங்கள். மிகவும் சுலபமாக. இப்பொழுது அவள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறாள். நிச்சயமாக! வெள்ளை மாளிகை சிங்காசனத்தில் (White House throne.) 42கவனியுங்கள்! ஏற்கனவே... கத்தோலிக்க பள்ளிகளைக் குறித்தும் பிராடெஸ்டெண்டு பள்ளிகளைக் குறித்தும் அன்றொரு நாள் எழுதப்பட்டிருந்ததை பார்த்தீர்களா? கத்தோலிக்க பள்ளிகளை ஆதரியுங்கள், பிராடெஸ்டெண்டு பள்ளிகளை அல்ல என்று எழுதப்பட்டிருந்தது. ஒ , சகோதரனே, அப்படிப்பட்டவை இனி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள் . அவர்கள் அப்படி செய்யும் போது, என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். பாவம் குவிகிறது. தேசத்தை அவர்கள் தடுமாறும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள்... பெந்தெகொஸ்தே முதலில் போட்டியிட்ட போது, ஆல்ஸ்மித் ஜனாதிபதி தேர்தலுக்காக நின்ற போது, அது நாட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்சித்தது. அமெரிக்கா அப்பொழுது நன்றாக அறிந்திருந்தது. ஆனால் பெந்தகொஸ்தேயினர் மிகவும் உலகப்பிரகாரமாக வாழத்தொடங்கி, அதில் பிரவேசித்து, கிறிஸ்தவர்கள் என்னும் தங்கள் உரிமையை அரசியலுக்கு விற்றுப்போட்டு, வேதத்துக்கு மேலாக அரசியலை வைத்தனர். ஓ, என்னே! 43இப்பொழுது, ஒரு நிமிடம், இது எப்படி வந்ததென்று கவனியுங்கள். அவர்கள் என்ன செய்தார்களென்றும், அவர்கள் செய்த காரியங்களையும் நாம் எண்ணிப் பார்க்கும் போது, அது அப்படியே இங்கு இணையாக உள்ளது, பாவம் எங்கும் உள்ளது. யேசபேல் வந்து, ஜனங்கள் அனைவரையும் வசியப்படுத்தினாள். கவனியுங்கள், முடிவில் அவள் பாகாலுக்கு பெரிய கோவில்களைக் கட்டினாள். அது சரியா? பாகால் பூசாரிகள் எல்லாவிடங்களிலிருந்தும் திரண்டு வந்து, அங்கு ஒன்றுகூடி, பாகால் வழிபாட்டினால் தேசத்தை அசுசிப்படுத்தினர். அவர்கள் எப்படி செய்தார்கள், எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்று பாருங்கள். இன்றைக்கு அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை கவனியுங்கள். கத்தோலிக்க மார்க்கம் விழுங்கி, விழுங்கி, விழுங்கி, விவாகம் செய்து, இதை முறித்துப் போட்டு, அவர்கள் என்ன செய்வார்களென்று தானியேல் கூறினானோ, அதுவே நடைபெற்றுக் கொண்டு வருதைக் கவனியுங்கள். இரும்பும், களிமண்ணும் ஒன்றோடொன்று கலவாது, ஆனால் அவர்கள் தங்கள் வித்துக்களை ஒன்றோடொன்று கலக்க முயன்று, முறித்துப் போடுகின்றனர். கத்தோலிக்க பையனை மணக்கும் ஒவ்வொரு பிராடெஸ்டெண்டு பெண்ணும், தன் பிள்ளையை கத்தோலிக்கனாக வளர்க்க வேண்டும். எல்லாமே அந்த விதமாக மணம் புரிந்து கொண்டும், ஒருவரோடொருவர் கலந்தும், இது தொடர்ந்து நடந்து வந்து முடிவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதுமே புழுபுழுத்த நிலையையடையும். 44நாம் மிஷனரிகள் என்னும் நிலையில், மற்றவர்களை விடுவிக்க தென் அமெரிக்காவுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்லும் போது, என்ன செய்யப் போகிறோம்? டாமி ஆஸ்பார்னும், மற்றவர்களும் ஜனங்களை அஞ்ஞான வழிபாட்டினின்று விடுவிக்க முயன்று கொண்டிருக்கும் போது, அந்த ஜனங்கள் தங்கள் விரலை அவர்களிடம் சுட்டிக்காட்டி, நாம் இத்தகைய ஒரு தலைவரை தேர்ந்தெடுத்தோம் என்று கூறலாம் அல்லவா? உலகத்திற்கு என்ன நேரிடப்போகிறது? இது இங்குள்ள ஒவ்வொருவரையும் அசைக்க வேண்டும். நாம் என்ன பதில் கூறப் போகின்றோம்? அவர்கள், எங்களை இதிலிருந்து விடுவிக்க நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களே, ஆனால் உங்கள் சொந்த ஜனங்கள் அதையே அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்து. ''சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கின்றனரே'' என்று கேட்கும் போது, மிஷனரி என்ன பதில் கூறப்போகின்றார்? நாம் எப்படி... என்ன... 45நீங்கள் சரித்திரத்தின் பக்கங்களைத் திருப்பி, அவைகளைப் படித்து, அது முற்றிலும் சட்ட விரோதமான செயல் தானா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அத்தகைய செயலைப் புரிந்திருக்க மாட்டார்கள், ஆனால் பாருங்கள், நாமோ நமது கிறிஸ்தவ உரிமைகளை அரசியலுக்கு விற்று விட்டோம். அப்படித்தான் பிசாசு தன்னை உள்ளே நுழைத்துக் கொள்கிறான். ஆகாப், யேசபேலுக்கு பெயரளவில் ராஜாவாயிருந்தான் (figurehead), அவ்வளவுதான், பெயரளவில். அவன் தானாக ஒன்றையும் செய்ய மாட்டான். ஆனால் அவனுக்குப் பின்னால் உள்ள அந்த முறைமை அவனை அவ்வாறு செய்யத் தூண்டும். முற்றிலும் உண்மை! கிறிஸ்தவனே, உன் மனச்சாட்சியை தட்டி எழுப்பி, உறக்கத்தினின்று எழுந்திரு. நீ நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. நாம் உள்ள நிலைமை, அவர்கள் இருந்த நிலைமை, அவர்கள் எப்படி தங்களை தளர்த்திக் கொண்டார்கள்! 46தம்முடைய மிஷனரிமார்களைக் கண்டு தேவனுடைய மிகுந்த அன்பான இருதயம் எவ்வளவாக கூச்சலிட்டு கதறியிருக்கும்! அவர்களை அவர் உதாரணமாக வைத்திருந்தார். அவர்களுடைய ஒற்றுமையையும், ஆவிக்குரிய விதமாய் அவர்கள் தேவனை வழிபட்டு வருவதையும் கண்டு, எல்லா தேசங்களிலுமிருந்தும் ஜனங்கள் இங்கு வந்தனர். ஏனெனில் தேவன் இவர்களை ஆசிர்வதித்திருந்தார். ஆனால் இப்பொழுதோ, அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்புக்குத் திரும்பி, சரியானதை செய்வதைக் காண வேண்டுமென்று அவர் வாஞ்சிக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது! அவர்களோ தொடர்ந்து அவரை விட்டுவிலகி, விலகிச்சென்று, முடிவில் யேசபேல் நுழைந்து விட்டாள். அதை தான் நாம் செய்தோம். கிறிஸ்துவின் கொள்கைகளை விட்டு நாம் விலகி சென்றுவிட்டோம். தேவன் தமது ஊழியக்காரரை நாடு முழுவதும் அனுப்பி, அவர்கள் பரிசுத்தத்தை பிரசங்கித்தனர், யாத்திரீக பரிசுத்தர், நசரீன்கள், பெந்தெகொஸ்தேயினர் ஆகியோர், ''தேவனிடத்தில் திரும்புங்கள்! தேவனிடத்தில் திரும்புங்கள்!'' என்று பிரசங்கித்தனர். ஆனால் நீண்ட காலமாக நிறுவப்பட்ட ஸ்தாபன சபைகள் சிரித்து கேலி செய்தன. அவர்களில் அநேகர் நவீன விசுவாசிகள். எனவே, இந்த ஊழியக்காரர் செய்தவைகளை அவர்கள் குறைகூறி, ''அது பிசாசினால் உண்டானது'' என்றனர். அவர்கள் என்ன செய்தனர்? சபை அதற்கு செவி கொடுத்தது. அவர்களில் பெரும்பாலார் அதற்கு செவி சாய்த்தனர், முதலாவதாக, என்ன தெரியுமா? கத்தோலிக்க பெண் ஒருத்தி இதை அணிந்தால், பிராடெஸ்டெண்டு பெண்ணும் அணியலாம்; கத்தோலிக்க சபை இதை செய்யுமானால், பிராடெஸ்டெண்டு சபையும் இதை செய்யலாம். இதை மெலோடிஸ்டு செய்யும் போது, பாப்டிஸ்டு ஏன் செய்யக் கூடாது? இதை பாப்டிஸ்டு செய்யும் போது, பெந்தெகொஸ்தேயினர் ஏன் செய்யக்கூடாது? போன்றவை. பாருங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட முறைமைகள் அங்கு தான் உங்களைக் கொண்டு வருகின்றன. அல்லேலுயா. அது உண்மை. ஆகையால் தான் அதற்கு விரோதமாக நான் உள்ளேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தை அதற்கு விரோதமாயுள்ளது. மனிதரால் உண்டாக்கப்பட்ட முறைமைகள்; தேவன் அதற்கு விரோதமாயுள்ளார், அவருடைய வார்த்தை அதற்கு விரோதமாயுள்ளது, அவருடைய தீர்க்கதரிசிகள் அதற்கு விரோதமாயிருப்பார்கள், அவருடைய உண்மையான ஊழியர் அதற்கு விரோதமாயிருப்பார்கள், தேவனுடைய ஆவியால் பிறந்த எல்லோருமே அதற்கு விரோதமாயிருப்பார்கள். 47இஸ்ரவேல் எப்படி அந்த நிலையையடைந்தது என்று பாருங்கள். அது அலையோடு மிதந்து சென்று, முடிவில் யேசபேல் வந்தாள். அமெரிக்கா எவ்வாறு அந்த நிலையையடைந்தது என்று பாருங்கள், அது உலகமாகிய அலையுடன் மிதந்து சென்று, முடிவில் யேசபேல் சிம்மாசனத்தைகைப் பற்றிவிட்டாள். அது உண்மை. உண்மையில் யேசபேல் இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை, ஆனால் அவளே சிம்மாசனத்துக்குப் பின்னால் இருந்த முக்கிய தலைவி. அவ்வாறே கத்தோலிக்க குருக்களாட்சியும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை, ஆனால் அதுவே, அதற்கு பின்னால் உள்ள முறைமை. ஏனெனில், அவர் அவளை மணம் புரிந்து கொண்டிருக்கிறார். இந்த தேசத்தில் அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணுவார்கள் என்று வேதம் கூறுகிறது. (வெளி;13:14). 48ஓ, சகோதரனே, சகோதரியே, காரியம் என்ன? அது என்னவென்று எனக்குத் தெரியும். அவர்கள் லவோதிக்கேயா காலத்தை அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது, அங்கு தான் நாம் வந்திருக்கிறோம். இப்பொழுது நீங்கள் என்னை வெறுக்கலாம், ஆனால் உண்மை என்னவென்று என்றாவது ஒருநாள் நீங்கள் கண்டுகொள்ளும் போது, என்னை வெறுக்க மாட்டீர்கள். நீங்கள் இணங்காமல், எழுந்து இக்கட்டிடத்தை விட்டு செல்லக்கூடும், ஆனால், அது உங்கள் அறியாமையை புலப்படுத்துகிறது. ஆனால் என்றாவது ஒரு நாள் நீங்கள் உணருவீர்கள், அதற்காக வாஞ்சிப்பீர்கள், அது உண்மையென்று அறிந்து கொள்வீர்கள். நான் கர்த்தரின் நாமத்தினால் இதை உரைக்கிறேன்! என்னை நான் இலக்காக நிறுத்தியிருக்கிறேன், அது முடிவில் என்னை கல்லறைக்கு அனுப்பும். தேவன் உதவினால், நான் மரிக்கும் வரைக்கும் சாட்சியாக இருப்பேன். அது உண்மை. 49நாம் இன்று இந்நிலையில் இருக்கிறோம், எல்லாமே அப்படியே போய்க் கொண்டிருக்கிறது. இஸ்ரவேலுக்கு ஆகாப் என்ன செய்தான், அவன் பெயரளவில் தலைவனாக இருந்து, யேசபேலே எல்லாவற்றையும் நடப்பித்தாள். ஏனெனில், அவன் அவளை மணம் புரிந்திருந்தான். அமெரிக்காவில், நமது தலைவரும். நமது தலைவர் பணக்காரர் என்று உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் ஒரு கோடீஸ்வரர். யாரோ ஒருவர் என்னிடம் கூறினார், அது பத்திரிக்கையில் எழுதப்பட்டிருந்ததாகவோ அல்லது வானொலி அல்லது தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டதாகவோ, ஜாக் பென்னியோ, அல்லது வேறு யாரோ... எர்னி ஃபோர்டு என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர், அவருடைய தகப்பனார், அவர் இரண்டு நாடுகளை சொந்தமாக்கிக்கொள்ள அவருக்கு உதவி செய்தார்“ என்று கூறினார். அவருக்கு அது எப்படி கிடைத்தது? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? விஸ்கியின் மூலம்... மது. அதனால் தான் அவர் விஸ்கி போன்ற மதுவின் மேலுள்ள வரிகளை விலக்கினார். அது தான் அவரைப் பணக்காரராக்கியது. நமது நாட்டை கெடுத்தது எதுவோ, நமது ஜனங்களின் மனதைப் பாழாக்கினது எதுவோ, நமது வாலிபப் பையன்களை குடிகாரர்களாக மாற்றியது எதுவோ, நமது பெண்களை வேசிகளாகச் செய்தது எதுவோ, அதன் மூலம் பெற்ற பணமே அவரை பணக்காரராக்கியது. 50அதுவே, அந்த பழைய யேசபேல் முறைமை, நமது ஜனங்களை உபத்திரவப்படுத்தி, அவர்களுக்கு போதையுண்டாக்கி, அவர்களைச் சுட்டெரித்து, அவர்களை இரண்டாகக் கிழித்தெறிந்த ரோம மார்க்கம் (வேதம் கூறுகிறது), இரத்த சாட்சிகளின் அதே இரத்தம் அவளுக்குள் இருக்கிறது. அதோ அவர்கள், இருவரும் மணம் புரிந்துள்ளனர், அமெரிக்கர்களாகிய நாமோ தடுமாறிக் கொண்டு, ''பரவாயில்லை, நமக்கு கூடுதலாக டாலர்கள் கிடைக்கின்றன. நமக்கு நல்ல நேரம் இருந்து வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் நல்ல நிலைமையில் இருக்கிறோம்'' என்கிறோம். ஆனால், சகோதரனே, ஒரு நிமிடம் பொறு. இப்பொழுது அடுத்த சில நிமிடங்களுக்கு அதை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, என்ன நடந்ததென்று பார்ப்போம். 51போதகர்கள் அவர்களுடன் இணங்கி, அவர்களுடன் சேர்ந்து சென்றனர் எல்லா முறைமைகளுமே. இஸ்ரவேல் முறைமை அனைத்துமே யேசபேலுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு ஒரு தேவபக்தியின் வேஷம் இருந்தது, ஆம். கடைசி நாட்களில் நமக்கும் தேவபக்தியின் வேஷம் ஒன்றிருக்கும் என்று வேதம் கூறவில்லையா? சகோதரனே, எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி விட்டன, நாம் முடிவில் இருக்கிறோம்! தேசப்பிரகாரமாக, நாம் முடிவில் இருக்கிறோம்! ஆவிக்குரிய பிரகாரமாக நாம் முடிவில் இருக்கிறோம்! ஒவ்வொரு முறைமையும் அதன் முடிவை அடைந்துள்ளது! அடுத்தபடியாக நடக்க விருப்பது கர்த்தருடைய வருகையும், சபை மறுரூபப்படுதலுமே. 52தேவன் அடையாளம், அற்புதம் எல்லாவற்றையும் அனுப்பினார், அவரால் முடிந்த அனைத்தும் செய்து ஜனங்களை இழுக்க முயன்றார். ஆனால் அவர்களோ, தொடர்ந்து அதற்குள் சென்று விட்டனர். இந்த நகரத்தை பாருங்கள், இதைச் சுற்றிவுள்ள நகர்புறத்தை பாருங்கள், இதில் நூற்றுக்கணக்கான பெந்தெகொஸ்தேயினர் உள்ளனர். ஆனால், சத்தியத்தில் நான் நிற்கிறேன் என்னும் காரணத்தால், இன்று பிற்பகல் அவர்கள் எங்குள்ளனர்? இந்த கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று யாரோ ஒருவர் அவர்களிடம் கூறிய காரணத்தால். வேண்டுமென்று செய்யும் சரித்திரனாகிய, நீ... தேவன் உன்னிடம் இரக்கம் பாராட்டுவாராக, என்று மாத்திரமே நான் கூற முடியும். கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு முதுகெலும்பு இல்லாதிருக்கும் போது, உங்களுக்கு முதுகெலும்புக்குப் (backbone) பதிலாக கோழியின் மார்பெலும்பே (wishbone) உள்ளது. உண்மை! நமக்கு என்ன அவசியமென்றால் பற்சுளைக் கொண்டிருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே'' அது எல்லாவற்றையும் கடித்து துண்டாக்கி விடும். மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் சென்று, அதைக் குறித்து நாங்கள் என் சத்தமிடுகிறோம் என்று வியக்கின்றீர்கள். பின்பு பாருங்கள், நீங்கள் அதை புறக்கணித்து விடுகிறீர்கள். அதை நான் எதிர் பார்க்கிறேன், அதை எதிர்பார்க்க வேண்டும். 53இவையனைத்தும் இஸ்ரவேலில் நடந்து கொண்டிருந்தது. முடிவில் ஒரு நாள், தேகம் முழுவதும் மயிர் வளர்ந்த ஒருவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான், அவன் தான் திஸ்பியனாகிய எலியா. அவன் எந்த ஸ்தாபனத்திலிருந்தும் புறப்பட்டு வரவில்லை, அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான், அவனுக்கும், ஸ்தாபனத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. அவன் கர்த்தருடைய தீர்க்கதரிசி. சகோதரனே, அவன் யேசபேல் இராஜ்யத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அசைத்து விட்டான், அவர்கள் அவனை வெறுத்தனர். அவனுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, அதை என்னால் உறுதியாக கூறமுடியும். அவனுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று வேதம் கூறுகின்றது; நிச்சயமாக. அவன் முகத்தில் வர்ணம் தீட்டியிருந்த யேசபேல்களை எரிந்து போகும்படி செய்தான், அவன் யோவான் ஸ்நானனைப் போல், கோடாரியை மரத்தின் வேரருகே வைத்தான் என்று நினைக்கிறேன். மரத்துண்டுகள் எங்கே விழுந்த போதிலும், கோடாரியை அவன் வேரருகே வைத்தான். அவன் தேசத்தை அசைத்து, அவர்கள் தவறென்று காண்பித்து, அவர்களை யேசபேல் வழிபாட்டிலிருந்து உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் மறுபடியும் - அழைக்க முயன்றான். 54அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அவனை ஏற்றுக் கொண்டனரா? அவர்கள் அவனை வெறுத்தனர். ஆனால் அவனுடைய வார்த்தையோ புறப்பட்டு சென்றது. ஏனெனில் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருந்தான், தேவன் அவனுடன் கூட கிரியை செய்து, அவன் சொன்னவை நிறைவேறியதன் மூலம், அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி என்பதை காண்பித்தார். அவன் செய்த அனைத்துமே அவன் தேவனுடைய தீர்க்கதரிசி என்பதை நிருபித்தன. ஆயினும் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. ஏனெனில் அவர்களுடைய நாடகக்கொட்ட கைகளையெல்லாம் (playhouses) அவன் கிழித்தெறிந்தான். அவை தவறு என்று அவன் அவர்களிடம் கூறினான். ஆகாப் இன்பம் விரும்பும் ஒருவன். உண்மை! அவர்கள் எலியாவை நம்பவில்லை என்பதை கவனியுங்கள், ஆயினும் அவன் பிரசங்கித்துக் கொண்டேயிருந்தான். போதகர் எவரும் அவனுடன் இணங்கவில்லை. ''அவன், கர்த்தாவே, நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன், அவர்களைப் பாரும், அவர்கள் என்னுடன்... யாருமே என்னுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்'' என்றான். ஆனால் அவன் செய்ய வேண்டிய வேலை ஒன்றிருந்தது, அவன் அதை செய்து முடித்தான். அவனிடம் தேவனுடைய வார்த்தை, கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இருந்தது. அவன் தேசத்தை தாக்கினான், சபையைத் தாக்கினான், அங்கிருந்த எல்லாவற்றையும் தாக்கினான். தேவன் அவனோடே கூட இருந்தார். 55கடைசி நாட்களில் அவர் இந்த நாட்டுக்கும் திரும்பி வருவதாக வாக்களித்துள்ளார். எனக்குத் தெரியும், இயேசுவை... மத்தேயு;17ல் ''அவர்கள் இயேசுவை, எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே...'' என்று கேட்டதற்கு (மத்.17:10), அவர் என்ன சொன்னாரென்று கவனியுங்கள்: ''எலியா முந்தி வரவேண்டியது மெய்தான்...'' எதிர்காலம். ஆனால், அவர் யோவானை உதாரணமாகத் தருகிறார். யோவான் மல்கியா;4ல் கூறப்பட்டவன் அல்ல, அவன் மல்கியா;3ல் கூறப்பட்டவன்: ''வழியை ஆயத்தம் பண்ண, நான் என் தூதனை அனுப்புகிறேன்.'' மல்கியா;4ல் அவர்: இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும். அப்பொழுது பூமி எரிந்து சாம்பலாகும், அந்த நாள் வருகிறதற்கு முன்னே நான் எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன்'' என்றார். அது யோவான் அல்ல. ஏனெனில் யோவான் வந்த போது கர்த்தர் பூமியை எரிக்கவில்லை. கடைசி அதிகாரம் கடைசி வசனத்தை நீங்கள் கவனிப்பீர்களானால் அவர், ''அவன் (கவனியுங்கள்; அவன், அவனைக் குறித்து பேசுகிறார்) பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்'' என்றுரைத்திருக்கிறார். 56இப்பொழுது கவனியுங்கள்! முதலாம் யோவான் - முதலாம் எலியா வந்தான். அவன் என்ன செய்தான்? அவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தான். அது பழைய, வைதீக, கடின இருதயங்களை, இளைய சபையின் விசுவாசத்துக்கு - பிள்ளைகளுடைய விசுவாசத்துக்கு - திருப்பினது. ஆனால் அடுத்த எலியா முடிவு காலத்தில் வரும் போது, அவன் பிதாக்களுடைய இருதயங்களை - இல்லை, பிள்ளைகளுடைய இருதயங்களை எடுத்து, அவைகளை பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்துக்குத் திருப்ப வேண்டும். வித்தியாசத்தைக் காண்கிறீர்களா? இன்று. நம் மத்தியில் காணப்படும் பெயரளவில் உள்ள ஊழியக்காரனைப் போல் அவன் இருக்க மாட்டான். அவன், அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்துக்கு நேரடியாகச் சென்று, அங்கிருந்து தொடங்குவான். அவன் கலப்படமற்ற சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பெந்தெகொஸ்தே நாளன்று. பேதுரு செய்ததையே செய்வான். ஏனெனில் அன்று பேதுரு கூறினவை வேதத்திலுள்ள மற்ற அனைத்தையுமே உறுதிப்படுத்தின. எலியா வரும்போது, ஒரு ஸ்தாபனத்துடன் ஓட்டிக் கொண்டிருக்க மாட்டான். முன் காலத்து எலியா செய்த விதமாகவே, இவன் ஸ்திரீகளை வெறுப்பான் - கெட்ட ஸ்திரீகளை, யோவான் செய்தது போன்று. அவர்களைப் போலவே இவனும் வனாந்தரத்தின் மேல் பிரியம் கொண்டிருப்பான், அவன் சும்மாவிட்டு வைக்க மாட்டான். அவன் வருகையை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். அவன் வருவான்! அவன் வருவான் என்று தேவன் கூறியுள்ளார். எனவே அவன் இங்கிருப்பான். 57இன்று நாம் பெற்றிருக்கும் செய்தியானது. அவனுடைய மகத்தான வருகைக்கு முன்னோடியாகத் திகழும் என்று நம்புகிறேன். ஆம், ஐயா! அவன் அவனுடைய பாதையில் வந்து கொண்டிருக்கிறான், அவன் ஏற்கனவே பிறந்து விட்டான். முன்காலத்து எலியாவைப் போல் அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வேகமாக வருவான். அவன் எங்காவது தன்னை அறியப்பண்ணுவான். அவன் அப்போஸ்தலர்;2ஐ பிரசங்கம் பண்ணுவான், அவன் இந்த பிள்ளைகளின் விசுவாசத்தை பெந்தெகொஸ்தே பிதாக்களிடம் திருப்புவான். அவன் அப்போஸ்தலர்;2க்கு சென்று - அப்போஸ்தலர்;2:38 - அங்கிருந்து படிப்படியாய் வருவான். அவன் உண்மையான, கலப்படமற்ற சுவிசேஷத்தைக் கொண்டு வருவான். அவன் யேசபேலுடனும், அவளுடைய முறைமையுடனும் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிருக்க மாட்டான். அவன் தேவனுடைய ஊழியக்காரனாயிருப்பான். நிச்சயமாக இருப்பான்! அவன் வருவானென்று வேதம் கூறுகிறது. அவன் தீர்க்கதரிசனம் உரைத்து ஆதியிலே எலியா இஸ்ரவேலில் செய்தது போலவே, தன் செய்தியை இந்த யேசபேல்களின் முகத்திற்கு நேராக தாக்கி பேசுவான். அவர்கள் அவனை வெறுப்பார்கள். அவர்கள் அவனுடன் ஒத்துழைக்க மாட்டார்கள். இல்லவே, இல்லை. அவன் வருவான். தேவன் அதை வாக்களித்துள்ளார். எனவே அவன் காட்சியில் எழும்புவான். வேதம் கூறுவது போன்று. அவன் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு போதித்து, மாமிசப் பிரகாரமான காரியங்கள் - உலகப் பிரகாரமான காரியங்கள் - அனைத்தும் அதனின்று விலக்கி, சபையை - ஜனங்களை - ஒன்று சேர்ப்பான். 58''அது என் ஸ்தாபனம்'' என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று அறிகிறேன். சகோதரனே, நீங்கள் எண்ணுவது தவறு. யோவான் ஒரு மனிதன் முறைமையாக, இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதனை அறிமுகப்படுத்த வந்தான். எலியாவும் ஒரு முறையையாயிராமல், அது ஒரு மனிதனாக இருக்கும். இயேசு அவ்வாறு கூறியுள்ளார். அது பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதனாக இருக்கும். அவன் மூன்று அல்லது நான்கு தெய்வங்களை அறிமுகப்படுத்த மாட்டான், அவன் ஒருவரையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே அறிமுகப்படுத்துவான், அவனுடைய செய்தியானது பெந்தெகொஸ்தே பிள்ளைகளை அசைத்து பிதாக்களின் விசுவாசத்துக்கு கொண்டு செல்லும். சகோதரனே, இதை நினைவில் கொள்வாயாக. உங்களை குற்றப்படுத்த வேண்டும் என்னும் காரணத்தால் இவைகளை நான் கூறுவேனானால் நான் பீடத்தண்டை செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். நான், ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதை உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் உங்களிடம் உண்மையைக் கூறினேன் என்பதை தேவன், தேசம் முழுவதும், உலகம் முழுவதும் உறுதிப்படுத்தியிருக்கும் போது, தவறு எங்கேயுள்ளது என்பதை என்னிடம் கூறுங்கள்! நான் உங்களிடம் உண்மையைக் கூறுகிறேன். வேகமாக தேவனிடத்தில் திரும்புங்கள்! இந்த முறைமைகளை விட்டு வெளியே வாருங்கள். ஏனெனில் வேதம் வெளிப்படுத்தின விசேஷத்தில், ரோமன் கத்தோலிக்க மார்க்கம் ஒரு வேசியென்றும், அவள் வேசிகளுக்கெல்லாம் தாய் என்றும் கூறுகிறது (அது என்ன? சபைகள், முறைமைகள்). 59மெதோடிஸ்டு சபை, லூத்தரன் சபை எங்கிருந்து வந்தன? லூத்தரன் சபை எங்கிருந்து வந்தது? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, மற்றும் எல்லா ஸ்தாபனங்களும் எங்கிருந்து வந்தன? தேவன் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தவில்லை. இயேசு சபையை நிறுவின போது கத்தோலிக்க சபை தொடங்கினதாக அவர்கள் கூறுகின்றனர், அதற்கு ஆதாரமாக சரித்திரத்திலிருந்து ஒரு பக்கமோ, வேதத்திலிருந்து ஒரு பக்கமோ எனக்குத் தேவை. கடைசி அப்போஸ்தலன் மரித்து முன்னூற்றாறு ஆண்டுகள் வரைக்கும் ஒரு ஸ்தாபனம் இருக்கவில்லை. அதன் பிறகு அவர்கள் நிசாயா ஆலோசனை சங்கம் உண்டாக்கிக் கொண்டு, ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். லூத்தர் வெளியே வந்த போது... அவர் மகத்தான தேவனுடைய மனிதன், ஆனால் அவர் சென்றவுடனே, அந்த சிறு கூட்டம் ஜனங்கள் வேறொரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டனர். அப்பொழுது பரிசுத்த ஆவி அவர்களை விட்டுச் சென்று, ஜான் வெஸ்லியின் மேல் தங்கினார். அவர் ஸ்தாபனம் எதுவும் ஏற்படுத்தவில்லை, ஆனால் அவர் சென்ற பின்பு, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அப்பொழுது பரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தேரிடையே தங்க வந்தார். அவர்கள் மெதோடிஸ்டு ஸ்தாபனத்தை விட்டு வெளி வந்தனர். என்ன நேர்ந்தது? அவர்களும், ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். 60ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற எலியாவின் வல்லமையுடனும், அபிஷேகத்துடனும் ஒரு மனிதன் முறைமை ஒன்று தோன்றும். அல்லேலுயா! அவன் அதை அசைப்பான். அவன் அவர்களிடம் தீர்க்கதரிசனம் உரைத்து எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தான், தேவனும் அவனுடன் கூட இருந்து கிரியை நடப்பித்தார். ஆனால், அவனுடைய கடைசி செய்தி வெள்ளை மாளிகையின் (White House) மேல் தாக்குதலாக அமைந்திருக்கும். யோவான் வந்த போது, அவனுடைய கடைசி செய்தி அக்காலத்து வெள்ளை மாளிகையின் மேல் தாக்குதலாக அமைந்திருந்தது. எலியாவின் கடைசி செய்தியும்; அவன் தேவனுடைய சமுகத்திலிருந்து அன்று காலை புறப்பட்டு சாலையின் வழியாக நடந்து வந்த போது, அவன் தேகமெல்லாம் மயிர் வளர்ந்திருந்தது, அவனுடைய வழுக்கை தலை பிரகாசித்தது, அவனுடைய தாடி காற்றினால் அசைந்தது, அவனுடைய கண்கள் தேவனுடைய மகிமையால் மிளிர்ந்தன, அவன் கையில் தடியைப் பிடித்துக் கொண்டு, கால்கள் தள்ளாடாமல் நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் சமாரியாவிலிருந்து நேராக வெள்ளை மாளிகைக்கு சென்று, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றான். அவன் எதற்கும் பயப்படவில்லை. சபைகள் அவனைப் புறக்கணித்தன, ஜனங்கள் அவனைப் புறக்கணித்தனர், இப்பொழுது தன் கடைசி தாக்குதலை அவன் வெள்ளை மாளிகையின் மேல் செலுத்துகிறான். 61அதன்பிறகு என்ன நடந்தது? கவனியுங்கள்! அந்த தாக்குதலுக்குப் பிறகு, அவன் அமைதியாகிவிட்டான். யாரும் அவனைக் குறித்து ஒன்றுமே கேள்விப்படவில்லை. தேவன் அவனை காட்சியிலிருந்து அழைத்துக் கொண்டார். அவர், எலியாவே, உன் செய்தியை இஸ்ரவேல் முழுவதும் அறியப்பண்ணினாய். அவர் களுக்கு அது தெரியும். இப்பொழுது அவர்களை விட்டுவிலகி வனாந்தரத்துக்கு வா. உன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்கொள். ஏனெனில் நான் ஒன்றைச் செய்யப் போகிறேன். என் செய்தியைப் புறக்கணிப்பதனால் என்ன நேரிடும் என்று அவர்களுக்கு காண்பிக்கப் போகிறேன்'' என்றார். என்ன நேர்ந்தது? யுத்தம், பஞ்சம், பசியால் வாடுதல். பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது. ''என்ன வந்து, கொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்! என்ன தொடரப் போகிறது என்பதைக் கவனியுங்கள்! பஞ்சம் உண்டாயிருந்தது, பாஞ்சம் ஒன்று வரும்.'' ஓ, ஆகாரம் இல்லாத பஞ்சம் அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய சத்தியத்தையும் கேட்கக் கூடாதபடிக்கு பஞ்சம். எல்லா சபைகளுமே அன்னியோன்னியமாகி அதற்குள் நுழைந்து விடும். அவர்கள் ஏற்கனவே அதனால் விழுங்கப்பட்டுள்ளனர். 62எலியா என்ன செய்தான்? ஜீவத்தண்ணீர் கிடைக்கக் கூடிய மலையின் மேல் மறைந்திருந்த ஒரு நீரூற்றை அவன் கண்டான். அவன் அங்கு தேவனுடைய வல்லமையின் கீழ் அமர்ந்திருந்த போது, தேவனிடத்திலிருந்து அவனுக்கு வெளிப்பாடு கிடைத்தது. மற்றவர்கள் பசியால் வாடிக் கொண்டிருந்த போது, இந்த வெளிப்பாடுகள் அவனுக்கு மறைந்திருந்த சிறு நீரூற்றாக அமைந்திருந்தது. தேவன் தமது ஊழியக்காரரை (காகங்களை) ஆசிர்வதிப்பாராக. அவன் ஜனங்களிடமிருந்து பிரிந்திருந்த போது, இவை அவனுக்கு உணவைக் கொண்டு தந்தன. ''அவர்கள், கீழே எழுப்புதலுக்காக வாடி, அவனுடைய எழுப்புதல்களைக் குறித்து நாம் ஒன்றும் கேட்பதில்லையே... நமது ஸ்தாபனங்களை தாக்கிக் கொண்டிருந்த அந்த கிழவன் இப்பொழுது எங்கே?'' என்று கேட்டார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. அவன் தனிமையான ஓரிடத்திற்கு சென்று தேவனுடன் கூட இருந்தான். அவர்கள் அவனுடைய சத்தத்தைக் கேட்கவில்லை. அதன் பிறகு அவர்கள் காணத் தொடங்கினர். 63தேவன் ஒரு செய்தியை அனுப்பி அதை ஜனங்களுக்கு உரைத்து, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் போனால், அவர் தமது ஊழியக்காரனை அங்கிருந்து விலக்கி, தமது வாதைகளை அனுப்புகிறார்: பஞ்சம், மரணம் (ஆவிக்குரிய மரணம், சரீர மரணம் கூட). சகோதரனே, மனக்கிலேசம் வருவதைப் பொறுத்திருந்து பார். அப்படிப்பட்ட ஒன்றை நீ கண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய், சற்று கழிந்து என்ன நடக்கிறதென்று பார். அப்படிப்பட்ட ஒன்றை நீ கண்டிருக்க மாட்டாய். ஒரு நல்ல ஆவிக்குரிய எழுப்புதலுக்காக நீ ஏங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய். சிறிது காலம் பொறுத்திருந்து பார். சற்று காத்திரு, தேவனுடைய வார்த்தையைக் கேட்க நீ வாஞ்சித்து கதறி அழுவாய். வேதம் அவ்வாறு கூறுகின்றது. ''கடைசி நாட்களில் பஞ்சம் உண்டாகும், அது ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல. அது உண்மையான தேவனுடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்“ என்று தீர்க்கதரிசி கூறியுள்ளான் (ஆமோஸ் 8:11). அந்த சத்தம் வனாந்தரத்தில் எங்கோ ஓரிடத்தில் மறைந்து அமைதியாயிருக்கும். அவர் தமது ஊழியக்காரராகிய காகங்களை நியமித்தார். அந்த ஊழியக்காரப் பறவைகள் ஆசிர்வதிக்கப்படுவதாக! அவன் சபையிலிருந்து பிரிந்திருந்த நேரத்தில் அவை எலியாவின் சத்தத்தை உயிருடன் வைத்திருத்தம், இந்த காகங்கள் அவனுக்கு காலையில் இறைச்சியும், அப்பமும் கொண்டு வந்து கொடுத்தன, மாலையிலும் இறைச்சியும், அப்பமும் கொண்டு வந்து கொடுத்தன. அவன் அந்த சிறு நீரூற்றின் தண்ணீரைப் பருகினான். ஆனால், கீழேயிருந்த மற்றவர்களுக்கோ ஆவிக்குரிய ஆகாரமும், தண்ணீரும் கிடைக்காமல் போயிற்று. 64ஒருநாள், பாவம் ஜனங்களைக் கொன்று, தேவன் தமது ஜனங்களை முழங்காற்படியிடச் செய்த பிறகு... யேசபேல் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாள், அவள் அதை மறுபடியும் செய்வாள்! அது தேவனுடைய பரிசுத்த வேதாகமம் உரைக்கிறதாவது. “அவள் அதை மறுபடியும் செய்வாள்.” இப்பொழுது அவள் பெயரளவில் தலைவனின் பின்னால் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, தன் விருப்பப்படி அதை திரித்துக் கொண்டிருக்கிறாள். யாரும் அவளை தடுத்து நிறுத்த மாட்டார்கள், நிச்சயமாக, இப்பொழுது யாரும் அவளை தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஏனெனில் மத சம்பந்தமான வட்டாரத்தில் அவர்களுக்கு எது கிடைக்கவில்லையோ, அதை அரசியலில் நுழைவதினால் பெற்றுக் கொள்கின்றார். அவர்கள் அங்கு அதை செய்து விட்டனர். நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அந்த அரசியல் அவர்களை மிருகத்தின் முத்திரைக்கு அழைத்து செல்லும். பாருங்கள்? வேதம் அவ்வாறு உரைத்துள்ளது. 65நமக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிவேன். நான் வேகமாக முடிக்கிறேன். கர்த்தர் என்னை அனுமதிப் பாரானால், இந்த கடைசி வார்த்தையை நான் கூறியாக வேண்டும். கவனியுங்கள்! தேவன் எலியாவை அசைக்கும் வரை, அவன் மலையின் மேலேயே தங்கியிருந்தான். அவனுக்கு எழுப்புதல்“கள் எதுவுமில்லை. அவன் அதற்கு விரோதமாக பிரசங்கிக்கவில்லை, அவன் ஒன்றும் செய்யவில்லை. அவன் வனாந்தரத்தில் தேவனுடன் தனியாக நின்று கொண்டிருந்தான். ஏனெனில் அவன் வனாந்திர மனிதன். அவன் வனாந்தரத்தில் வளர்க்கப்பட்டவன். அவன் வனாந்தரத்துக்கு சென்று, தேவனுடன் தனித்திருந்தான். அவன் தனது செய்தியைக் கொடுத்த பிறகு சபையிலிருந்து பிரிந்து சென்றான். சபை அதை புறக்கணித்தது, முடிவில் ஸ்தாபனங்கள் அதனுடன் எவ்வித தொடர்புக்கொள்ள மறுத்தன. எனவே அவன் அங்கிருந்து செல்ல வேண்டியதாயிற்று. தேவன் அவனை காட்சியிலிருந்து அழைத்து, வனாந்தரத்துக்கு கொண்டு சென்று, இங்கு வா, அவர்கள் உனக்கு செவி கொடுக்க மாட்டார்கள், இங்கு வா, அவர்கள் மேல் என் நியாயத்தீர்ப்பை ஊற்றப் போகிறேன்'' என்றார், ஆமாம். அவன் இந்நாட்களில் ஒன்றில் இங்கிருப்பான். நீங்கள் கவனித்து வாருங்கள். 66அவன் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களுக்குப் பிறகு, என்ன நேர்ந்தது? சபை இளைத்துப் போனது. யேசபேலின் பயங்கரவாதம்; அவள் எல்லாரையுமே விழுங்கிப் போட்டாள். அவள் எல்லாரையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, தோப்புகளைக் கட்டி, மற்ற செயல்களைப் புரிந்தாள்! ஆனால், ஒரு நாள் தேவன் அவனை வெளியே அழைத்தார். இதோ அவன் வெளியே வருகிறான், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், என் மேல் கோபம் கொள்ளாதீர்கள். நான் ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். அவன் வெளியே வந்த போது, தேவன் என்ன செய்தார்? அவனை ஒரு விதவையிடம் அனுப்பினார். ஒரு காலத்தில் ஒரு மனிதன் அவள் மேல் அதிகாரம் செலுத்தினான், ஆனால் மரணம் அவளை அதிலிருந்து விடுவித்து தீர்க்கதரிசியின் வார்த்தையை விசுவாசிக்கும் படி செய்தது. அதை கவனித்தீர்களா? அவளுக்கு ஒரு கணவன் இருந்தான், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை சேர்ந்தவனாயிருந்து, அவளை இந்த பக்கமும், அந்த பக்கமும் வழி நடத்தினான். ஆனால் அந்த பெரிய பஞ்சம் வந்த போது, அவன் விழுங்கப்பட்டடான். மரணம் அவனை ஆட்கொண்டது. அதன் பிறகு அவள் எந்த ஸ்தாபனத்துடனும் தொடர்பு கொண்டிருக்கவில்லை, எனவே அவள் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்க ஆயத்தமாயிருந்தாள். ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். அவளுடைய கணவன் (ஸ்தாபனம்) மரித்துப் போனான், அவள் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தாள். கர்த்தர் அவனிடம், ''இப்பொழுது அவளிடம் போது, அவள் உனக்கு செவி கொடுப்பாள். அவளுக்கு நான் கட்டளையிட்டிருக்கிறேன்'' என்றார். 67ஓ, சில நேரங்களில் நாம் நினைப்பதுண்டு, இங்குள்ள. சிறு கூட்டமாகிய நீங்கள் மிகவும் விசுவாசமுள்ளவர்களாயிருந்து, ஒரு கூட்டத்தை நடத்த உங்களால் கூடுமான எல்லாவற்றையும் செய்து, உங்கள் இருதயம் நேர்மையாயுள்ளது என்று ஜனங்களுக்கு காண்பிக்க முயன்று, அவர்கள் தேவனிடம் வர வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் தமது கண்ணை உங்கள் மேல் வைத்திருக்கிறார்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று நானறிவேன். அப்படி இல்லாமற் போனால், நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள், இப்படிப்பட்ட ஒரு கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள், தேவன் தமது கண்ணை உங்கள் மேல் வைத்திருக்கிறார். ஆம்! அவளுடைய கணவன் மரித்த போது, அவளுடைய ஸ்தாபனம் மரித்த போது, அவள் தீர்க்கதரிசியுடைய வார்த்தையைக் கேட்க ஆயத்தமாயிருந்தாள். எனவே, தீர்க்கதரிசி வாசலில் வந்து சிறிது தண்ணீர் கேட்ட போது, அதைக் கொண்டு வர, அவள் உள்ளே சென்றாள். அவன், “எனக்கு கொஞ்சம் அப்பம் கொண்டு வா” என்றான். அவள் திரும்பிப் பார்த்து அவனிடம், ''எங்களுக்குத் தேவையானது மாத்திரமேயன்றி, வேறொன்றும் இல்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்'' என்றாள். 68அவளிடமிருந்த சிறிது ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ள அவன் அனுப்பப்பட்டது போல் தோன்றினது, ஆனால். அதற்கு மாறாக நடந்தது. வார்த்தையை ஆதரிக்க அவளிடமிருந்ததை அவள் கொடுக்க சித்தம் கொண்ட போது, தேவன் அவளைப் போஷித்தார், அவ்வாறே, வார்த்தையை ஆதரிக்க தேவன் உங்களுக்குத் தந்தருளியுள்ள ஆவியை நீங்கள் அளிக்க சித்தங்கொள்வீர்களானால், தேவன் உங்களை உயிருடன் வைப்பார். அல்லேலூயா! ஓ, தேவனுக்கு மகிமை!சபையே, நீங்கள் காண்கிறீர்களா? எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்று எண்ணாதீர்கள், எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை. உங்களிடம் இருப்பதை நீங்கள் எவ்வளவு குறைவாக தேவனை விசுவாசித்தாலும், உங்களுக்குள்ள விசுவாசத்தை வார்த்தையின் மேல் வையுங்கள், ஒரு ஸ்தாபனத்தின் மேல் அல்ல! அதை தேவனுடைய வார்த்தையில் வையுங்கள், அவர் உங்களை உயிருடன் வைப்பார். அப்பொழுது அவள் ஆயத்தமானாள், அதற்கு முன்பு அவளால் அப்படி செய்ய முடியவில்லை, ஏனெனில் அப்படி செய்ய அவர்கள் அவளை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவள், ஆயத்தமானாள். அவள் அதை ஏற்றுக் கொள்வாளா? தேவன் ஒரு தீர்க்கதரிசியை அவளிடம் அனுப்பினார், அவள் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வாளா? அவள் இந்த தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்வாளா? ஆம். அவள் ஏற்றுக்கொண்டாள். அவன் அவளிடம், ''உனக்குள்ள சிறு ஜீவனை இங்கு வைத்து, முதலில் என்னிடம் கொண்டு வா'' என்றான். என்ன நேர்ந்தது?உலகத்திலுள்ள மற்றவர் இளைத்துப் போய், பசியால் வாடி மரித்துக் கொண்டிருந்த போது, இவளும், இவள் பிள்ளைகளும், இவள் வீட்டாரும் நாளொன்றுக்கு மூன்று வேளை நல்ல ஆகாரம் அருந்தினர். வார்த்தையின் பேரிலுள்ள தெய்வீக வெளிப்பாடு, சகோதரனே, இதை நீ புரிந்து கொண்டாய் என்று நம்புகிறேன். என்ன நடந்தது? பஞ்சம் தீரும் வரைக்கும், அவனை ஏற்றுக் கொண்டு அவனுடைய வார்த்தையை விசுவாசித்த அந்த ஸ்திரீயுடன் (இந்த சபையுடன்) அவன் தங்கினான். அவன் அவளை (சபையை) கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு உயிரோடு வைத்தான், ஏனெனில் அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறினான். 69கதையின் மற்ற பாகத்தை எடுத்து பிரசங்கிக்க இப்பொழுது நேரமில்லை, அவன் எப்படி பாகால் தீர்க்கதரிசிகளுடன், பலப்பரீட்சைக்கு நின்றான் என்று உங்களுக்குத் தெரியும், இந்நாட்களில் ஒன்றில் அவன் அதை செய்வான், கவலைப்படாதீர்கள். அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வரும்போது, என்ன நடக்கிறதென்று பாருங்கள். என்ன நேர்ந்தது? தேவனுடைய உண்மையான ஊழியனாகிய எலியா தீர்க்கதரிசி தன் பாதையின் முடிவை அடைந்த போது, கர்த்தர் ஒரு நாள் அவனிடம், ''எலியாவே. நீ நீண்ட காலம் பிரசங்கித்து விட்டாய், நீ யேசபேலையும், அவளுடைய வர்ணத்தையும் எதிர்த்து போராடி, உனக்கு போதுமென்று ஆகிவிட்டது. நீ யோர்தானுக்கு வா என்றார்.'' அவன் சென்று யோர்தானை அடைகிறான். அந்த கலங்கலான, குளிர்ந்த தண்ணீரை எந்த மனிதனுமே சந்திக்க வேண்டும்: யோர்தான், மரணம். ஆனால், இந்த மகத்தான தேவனுடைய ஊழியன் நடந்து யோர்தானை அடைந்த போது; சுவிசேஷத்தில் அவனுடைய குமாரன் அவனுடன் நடந்து செல்கிறான்... ஓ ஆமாம், அவன் அவனுடைய குமாரன். ''என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாய் இருந்தவரே'' (2.இரா;2:12). அவனும் அவனுடைய குமாரனும் கைகோர்த்து யோர்தானை அடைந்த போது, அன்று காலை அவனுடைய தகப்பன் செல்வதை அவன் கண்டான். 70அவன் யோர்தானை அடைந்த போது, அவன் தன் கையை நீட்டி தன் தோளின் மேலிருந்த வல்லமையின் சால்வையை எடுத்து, ''மரணமே, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று சொல்லி யோர்தானை அடித்து, பிளந்து போ, இன்று காலை நான் கடந்து செல்லப் போகிறேன்'' என்றான். என்ன நடந்தது? அது இருபக்கமாகப் பிரிந்து பொடியைப் போல் உலர்ந்தது. அந்த வயோதிப தீர்க்கதரிசி என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் யோர்தானின் அக்கரையை நோக்கிக் கொண்டிருந்தான், அங்கு ரதமும், குதிரைகளும் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தன என்று அவன் அறிந்திருந்தான். அவனுடைய வேலை முடிந்துவிட்டது, அவன் வீடு சென்று கொண்டிருந்தான். சுவிசேஷத்தில் அவனுடைய குமாரன் அவனுடைய ஸ்தானத்தை வகித்தான். 71அன்றொரு நாள் நான் மேற்கு பாகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இது என் நினைவுக்கு வருகிறது. நான் வானொலி பெட்டியை திருப்பினேன் (நான் தனியாக மூன்று நாட்களாக இரண்டாயிரத்து நானூறு மைல் காரோட்டி செல்ல வேண்டியிருந்தது). நான் வானொலி பெட்டியை திருப்பினேன்... டெக்ஸாஸிலுள்ள டெல் ரியோ என்னும் நிலையத்திலிருந்து ஒலிபரப்பான ஆவிக்குரிய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் ஒரு வயோதிப நீக்ரோவைக் குறித்து பேசினார். அவர் மரணத்தருவாயில் இருந்தாராம். அவர் நதியண்டை வர வேண்டியிருந்தது. அவர், ''நான் அணியப் போகும் பொன் காலணிகள், அந்த பொன் வீதிகளில் நடந்து செல்வதற்கு'' என்று கூறினாராம். இந்த வயோதிப நீக்ரோ, அவர் வாழ்நாள் முழுவதும் பிரசங்கம் செய்தார். அவருக்கு ஆறுதலளிக்க அவருக்கிருந்த தெல்லாம் அந்த சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த 'பாஞ்சோ' (banjo) இசைக்கருவி ஒன்றுதான். அவர் பருத்தி மூட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டு பாஞ்சோவில் தெய்வீகப் பாடல்களை இசைத்துப் பாடுவது வழக்கம். அவர் அந்த பாஞ்சோவை வைத்துக் கொண்டே ஊழியத்திலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வார். அவர் சவாரி செய்த குட்டை வால் குதிரை இரதத்துடன் அங்கிருக்கும் என்று கூறினாராம். அதைக் குறித்து என் மனதில் எண்ணினேன். ''அவர், ஓ நான் அணியப் போகும் பொன் காலணிகள், பொன் வீதிகளில் நடந்து செல்வதற்கே'' என்றார். 72அவரைக் குறித்து பேசியவர் அந்த பாடலைப் பாடி முடித்தவுடன். நான் வானொலி பெட்டியை அணைத்தேன். நான் காரோட்டிக் கொண்டே, அது உண்மை, நானும் அங்கு வர வேண்டியவனாயிருக்கிறேன். எனக்கு ஆறுதல் அளிப்பது எது? இந்த வனாந்தரத்தில் எனக்கு எங்கு ஆறுதல் கிடைக்கும்? என்னிடம் ஒரு பழைய துப்பாக்கி உள்ளது. ஒவ்வொரு இலையுதிர் காலத்தின் போதும், நான் அதைக் கொண்டு வேட்டையாடுகிறேன். அது 270, மாடல் 721, ரெமிங்டன் துப்பாக்கி. அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சகோதரன் கலிபோர்னியாவில் எனக்கு அதை கொடுத்தார். அநேக ஆண்டுகளாக அதைக் கொண்டு நான் வேட்டையாடி வருகிறேன்... அது எனக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்து வந்துள்ளது, ஏனெனில் அது நன்றாக சுடக்கூடிய துப்பாக்கி. வனாந்திரத்தில் அது எனக்கு ஆறுதலாக உள்ளது. 73பிறகு என் தரிசனத்தைக் குறித்து நான் சிந்திக்கலானேன். அங்கு சென்று என் ஜனங்களை கண்ட போது, ஏதோ ஒன்று கனைப்பதைக் கேட்டேன். என் சிறு பிரின்ஸ் (நான் சவாரி செய்யும் குதிரை) அங்கு வந்து தன் தலையை என் தோளின் மேல் போட்டது. ''ஆம், ஒருநாள் காலையில் நானும் கூட யோர்தான் நதியண்டை வருவேன்'' என்று நினைத்தேன். நான் உபயோகித்த பழைய.. 270' துப்பாக்கி... சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சென்ற இலையுதிர் காலத்திலிருந்து அதை அங்கிருந்து எடுக்கவேயில்லை. நான் நதியண்டை வரும் போது, நான் சவாரி செய்த அந்த சேணமிட்ட குதிரையை அன்று காலை தேவன் என் இரத்தத்தில் பூட்டுவார். அது நதியின் மறுகரையில் நின்று கொண்டிருக்கும். தேவன் அதை அனுப்புவார். அன்றிரவு அதை நான் கண்டேன். என்றாவது ஒரு நாள் காலை அது என் இரதத்தில் பூட்டப்படும். நான் மேகங்களின் வழியாக மேலேறி சென்று விடுவேன். 74ஜெபம் செய்வோம். ஓ, நான் பொன் வீதிகளில் நடக்கும் போது அனுப்விக்கப் போகும் அந்த தேவனுடைய வல்லமை! இப்பொழுது - சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த பழைய துப்பாக்கிக்கு அங்கு ஒரு உபயோகமுமிராது. என் இரதம் வரும் போது, நான் தரிசனத்தில் கண்ட என் சிறு சேணமிட்ட குதிரை அன்று காலை நதியின் கரையிலுள்ள என் இரதத்தில் பூட்டப்பட்டிருக்குமோ என்று வியப்புறுகிறேன். அப்படி அது பூட்டப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். நான் எடுத்துக் கொள்ளப்பட விரும்புகிறேன். சபையும் அவ்வாறே மேலே செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் ஒவ்வொருவரும். 75நீங்கள் எப்பொழுது யோர்தானுக்கு வருவீர்கள் என்று அறிய விரும்புகிறீர்களா? இவ்வுலகிலுள்ள தேவபக்தியற்ற முறைமைகளை புறக்கணித்து, இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் கிறிஸ்தவரல்ல என்றால், உங்கள் கரங்களையுயர்த்தி, ''சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் யோர்தானை அடையும் போது...'' என்று சொல்வீர்களா? தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. ''நான் யோர்தானை அடையும் போது பரிசுத்த ஆவியின் வல்லமையை என் மேல் பெற்று, குளிர்ந்த தண்ணீரை அடித்து, அதன் வழியாக நடந்து செல்ல விரும்புகிறேன்.“ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று நான் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி உட்கார்ந்து கொண்டிருக்க முடிகிறது? உங்கள் நிலையை பரிசுத்த ஆவியானவர் எனக்கு அறிவிக்கிறார் என்று அறிந்தும் கூட, உங்கள் கையையுயர்த்த ஏன் தவறுகிறீர்கள்? வனாந்தர பிரயாணத்துக்கு நேரமாகி விட்டது என்பதை அது காண்பிக்கிறது! நாம் ஜெபிக்கும் முன்பு வேறுயாராகிலும் ஒருவர் கையுயர்த்த விரும்புகிறீர்களா? இருவர் மாத்திரமே கையுயர்த்தினர்; மூன்று பேர். மகனே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. 76எங்கள் பரலோகப் பிதாவே, மூன்று பேர். அவர்கள் அந்நாளில் அங்கிருப்பார்களானால், அது மிகவும் அற்புதமாயிருக்கும், கர்த்தாவே அவர்கள் அங்கிருப்பார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் கையுயர்த்தின காரணம் என்னவெனில், இந்த உலகப் பிரகாரமான முறைமைகள் மரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் உறுதியாய் அறிந்துள்ளனர். தேவனுடைய வார்த்தையின் சத்தத்தை கேட்பதென்பது விரைவில் அரிதாகிவிடும். தேவன் அதை சபையினின்று எடுத்து போடுவார். சத்தம், மணவாளனின் அழைப்பு விரைவில் போய்விடும். யேசபேல் முறைமை அது கேட்காதபடி அதை அமிழ்த்திவிடும், ஆனால் இவர்களோ எலியாவைப் போல் மறைந்துள்ள நீரூற்றினால் வாழ்ந்து, பஞ்சத்தின் போது காக்கப்பட விரும்புகின்றனர். தேவனே, அவர்களுக்கு இப்பொழுது பரிசுத்த ஆவியை அருளி, அவர்களுடைய இருதயங்களை சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்பி, அவர்களுடைய சிந்தனையை தேவனுடைய வார்த்தையின் பேரில் செலுத்தி, அவர்கள் இன்றும், இனிமேலும், என்றென்றைக்கும் வாழும்படியாக அருள்புரியும். பிதாவே, இவர்களை ஆசிர்வதியும். அவர்கள் உம்முடையவர்கள்: நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய். 77நமது தலைகள் வணங்கியிருக்கும் போது: உங்கள் கரங்களையுயர்த்தி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்பின நீங்கள் சிறிது நேரம் எழுந்து நிற்பீர்களா? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஜெபிக்க விரும்புகிறேன், எழுந்து நில்லுங்கள். ஓ தேவனே, நான் தவறி விட்டேனா? கைகளையுயர்த்தின அந்த மூன்று பேர்களும் கூட எழுந்து நின்று அதை ஏற்றுக்கொள்ள உறுதியற்றவர்களாய் உள்ளனரே! கர்த்தராகிய இயேசுவே, இதை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன், உமது வார்த்தையை நான் பிரசங்கித்தேன், நான் யாரிடமும் ஒப்புரவாகவில்லை. பிதாவே இந்த வீட்டை அவர்களிடம் ஒப்படைக்கிறேன். சபைக்கும் உமது ஊழியக்காரனுக்கும் எது தகுதியோ, அதை செய்வீராக. இவையனைத்தும் உமது கரங்களில் உள்ளன. பிதாவே, இழந்து போனவர்களை இரட்சியும், பசியுள்ள இருதயங்களை நன்மையினால் நிரப்பும், தாகமுள்ளவர்களுக்கு நித்திய ஜீவனைத் தந்தருளும், செய்தியை அறிவிக்க உமது ஊழியக்காரரை எழுப்பும், வியாதியஸ்தருக்கும், துன்பப்படுகிறவர்களுக்கும் சுகமளியும், நீர் மகிமையை எடுத்துக் கொள்ளும், என்னை உமது வார்த்தையுடன் சமர்ப்பிக்கிறேன். உமது பிரமாணங்களை என் கையிலும், என் இருதயத்திலும், என் சிந்தையிலும் எழுதுவீராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம். ஆமென். 78நாளின் முடிவில் நான் நதியண்டை வரும்போது... (அந்த பாட்டை நான் பாடமாட்டேன்.) என் நண்பர் அனைவரும் போய் விட்டார்கள் என்று தோன்றும் போது; எனக்கு வழியைக் காண்பிக்க ஒருவர் காத்திருப்பார். நான் தனியாக யோர்தானைக் கடக்க வேண்டிய அவசியமிராது. பில், ஜெப அட்டைகள் உன்னிடம் உள்ளதா? எனக்கு, பாரமாய் உள்ளது. இன்று என்ன அட்டைகள் கொடுத்திருக்கிறாய்? 'பி' (B)? 'சி' (C) வரிசை அட்டைகளையும் கொடுத்திருக்கிறாய் அல்லவா? சரி, அவர்களைக் கூப்பிடு. முதலில் 'பி', ஜெப அட்டை 'பி', ஒன்று. உங்கள் வியாதிக்காக ஜெபிக்கப் போகின்றோம். பி, ஒன்று யாரிடம் உள்ளது? ஜெப அட்டை, 'பி' ஒன்று பின்னால் உள்ள ஒருவரிடம். ஸ்திரீயே, இங்கே வா. பி, இரண்டு கையையுயர்த்து. அந்த ஸ்திரீயா? 'பி' மூன்று, தயவு செய்து கையையுயர்த்துவாயா? நீ எங்கேயிருக்கிறாய் என்று நான் காணட்டும். மூன்று? 'பி' நான்கு, 'பி', ஐந்து உங்கள் கைகளையுயர்த்துவீர்களா? அந்த மனிதனா? சரி, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. 79சரி, 'பி' அட்டைகள் வைத்திருப்பவர் எல்லோரும் எழுந்து நில்லுங்கள். அதை உலகின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புங்கள். சுவிசேஷ ஊழியம் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மிஷனரியும், அது எங்கிருந்தாலும் 'பி' ஜெப அட்டைகள் வைத்திருப்பவர் எழுந்து நின்று, உங்கள் எண்களின் படி வரிசையாக நில்லுங்கள். அடுத்தவை எவை? 'ஏ'? யாரிடம் ஏ, ஒன்று ஜெப அட்டை உள்ளது? 'ஏ' ஒன்று எங்கே? நிச்சயமாக இங்குதான் இருக்க வேண்டும். ஏ, ஒன்று. இரண்டு, மூன்று நாட்களாக அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகம் செய்து வந்துள்ளனர், எனவே அவர்கள் இங்கு இல்லாமலும் இருக்கலாம். 'ஏ', ஜெப அட்டை வைத்திருப்போர் எல்லோரும் வரிசையாக நில்லுங்கள். அந்த சுவற்றினருகில் செல்லுங்கள், பயபக்தியாக. இந்த வரிசை தொடங்குவதற்கு முன்பு, ஜெப அட்டைகள் இல்லாத உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். ஜெப அட்டைகள் வைத்திருப்போர், அட்டைகளை கைகளில் பிடித்துக் கொள்ளுங்கள். பையன்கள் வந்து அவைகளை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் காத்துக் கொண்டிருந்தீர்கள், நீங்கள் மாலையில் நேரத்தோடே வந்து உங்கள் ஜெப அட்டைகளை பெற்றுக் கொண்டீர்கள். எனவே, ஜெப வரிசையில் வர உங்களுக்கு உரிமையுண்டு, உங்களுக்கு ஜெபம் செய்வேன் என்று நான் வாக்களித்தேன். என வாக்குறுதியை காப்பாற்ற முயல்வேன், தேவன் எனக்கு உதவி செய்வாராக. 80அது உன் சிறு மகனா? மிகவும் அழகான சிறிய மனிதன். என்னை மன்னிக்கவும். இங்குள்ள ஸ்தீரீ உண்மையான அமெரிக்க பெண்ணுக்கு ஒரு உதாரணம். அவளுடைய சிறு மகன் சிறு நீள கோட்டையும் கோடு போட்ட ஜாக்கெட்டையும் அணிந்திருக்கிறான். இந்த வாலிப ஸ்திரீ தலைமயிரை நீளமாக வளர்த்து நன்றாக உடுத்தியிருக்கிறாள்... தேவன் அவளை தன் குடும்பத்தில் ஆசிர்வதிப்பாராக. அவளுடைய கணவர்... அது ''கிறிஸ்துவ மார்க்கம்'' என்று அதன் மேல் எழுதப்பட்ட உண்மையான அமெரிக்கா. நமது நாடு நீண்ட காலம் அவ்வாறிருப்பதாக. சிறு சீமாட்டியே, அப்படி கூறினதால் என்னை மன்னிக்கவும்... எது கிறிஸ்தவனைப் போல் காணப்படுகின்றதாக நான் கருதுகிறேன் என்பதை ஜனங்கள் காண வேண்டும். வர்ணம் எதுவுமின்றி, சீமாட்டியைப் போல். சகோ. ஸ்பால்டிங், தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. மகத்தான வைத்தியர் இங்குள்ளார், மகத்தான வைத்தியர், இப்பொழுது அருகில் உள்ளார், அனுதாபங் கொள்ளும் இயேசு; 81அவரை விசுவாசிக்கிறீர்களா? அவர் மகத்தான வைத்தியர் என்று விசுவாசிக்கிறீர்களா? சற்று நேரம் பயபக்தியாயிருங்கள். நமக்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. நான் செய்தியை சிறிது சுருக்கிக் கொண்டேன். நான் என்ன கூறினேன் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் உள்ள யாராகிலும் அவர்களை வரிசையில் நிறுத்துங்கள். சரியா? ஜெப அட்டைகள் உள்ள எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர். ஜெப அட்டைகள் இல்லாத நீங்களும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு விசுவாசமிருந்தால் தேவன் உங்களையும் அழைப்பார். ஜெப அட்டைகள் உள்ள அனைவரும் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். 82பின்னால் ஊனமுள்ள காலுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்... தேவன் அதை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால், விசுவாசங் கொண்டிரு. தேவன் அதை உனக்கு அருளுவார். வியாதியாயுள்ள உன் தந்தை குணமாகிவிடுவார் என்று நினைக்கிறாயா? நீ விசுவாசித்தால், அதைப் பெற்றுக் கொள்வாய். அங்குள்ள உன்னைக் குறித்தென்ன? நீ நரம்பு தளர்ச்சி கொண்டுள்ள உன் மருமகனுக்காக (nephiew) ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அவனை தேவன் சுகமாக்குவாரென்று நினைக்கிறாயா? அங்கு உட்கார்ந்திருக்கிற ஸ்திரீயே, நீ விசுவாசிப்பாயானால் அதை பெற்றுக்கொள்வாய். நீங்கள் எல்லோருமே விசுவாசிக்கப் போகின்றீர்களா? இப்பொழுது நான்... தெய்வீக சுகமளித்தலில், விசுவாசங் கொண்டுள்ள என் சகோதரரில் எத்தனை பேர் சுவிசேஷ பிரசங்கிகள், முழு சுவிசேஷ பிரசங்கிகள், வேறு யாராகிலும் இங்குள்ளனர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். இந்த ஜனங்களுக்கு ஜெபம் செய்வதற்காக உதவ நீங்கள் இங்கு வர வேண்டுமென்று விரும்புகிறேன். நான் மாத்திரமே ஜனங்களுக்கு ஜெபம் செய்ய வேண்டும் என்பதில்லை, நீங்களும் ஜெபம் செய்யலாம் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். நீங்கள் இங்கு வந்து என்னுடன் மேடையின் மேல் நில்லுங்கள் சகோதரரே, அப்படி செய்வீர்களா? அந்த போதகர்கள்? இங்கு வந்து மேடையின் மேல் நில்லுங்கள். அது நல்லது. சகோதரரே, நன்றி சகோதரரே, முன்னால் வாருங்கள். 83என்ன சொல்லுகிறீர்கள்? (ஒருவர், ''இங்கு இரண்டு வரிசைகளை உண்டாக்கிக் கொள்ளலாமா?'' என்று கேட்கிறார் - ஆசி ). சரி உண்டாக்கிக் கொள்ளுங்கள். இங்கு இரண்டு வரிசைகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அது நன்றாயிருக்கும். சகோதரரே, இந்த பக்கம் திரும்புங்கள். நான் ஜனங்களை இங்கு கொண்டு வரப் போகின்றேன், உங்களில் சிலர், எனக்கு இந்த பக்கம் வந்து நின்று கொள்ளுங்கள். அப்படித்தான். ஜனங்களே, இந்த அருமையான மனிதரை காண்கிறீர்கள் அல்லவா? இவர்கள் இதே இடத்தில் நின்று கொண்டு, நான் பிரசங்கிக்கும் அதே சுவிசேஷத்துக்கு உறுதியாக நிற்கக்கூடியவர்கள். பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிப்பதனால் இங்கு வந்துள்ளனர். இந்த மேடையின் மேலுள்ள உங்கள் போதகரைக் குறித்து நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். அவர் கடினமாக, ஆழமாக பிரசங்கிப்பவர். இவர்களெல்லாம் வெளிப்பாட்டைக் கொண்டுள்ள மனிதர்... நான் எந்த மனிதனுக்கும் விரோதமாயில்லை. சில நேரங்களில் நாம் முறைமைகளில் சிக்கிக் கொள்கிறோம். இந்த முறைமைகளுக்கு விரோதமாக நாங்கள் இருக்கிறோம், மனிதருக்கு (தேவனுடைய ஊழியருக்கு) விரோதமாயல்ல. 84நான் ஒவ்வொருவருடைய சிந்தனையிலுள்ளதையும் பகுத்தறிந்து கூற முற்பட்டால், எவ்வளவு நேரம் நான் இங்கிருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? ஐந்து, ஆறு, அல்லது பத்து பேர்களுக்கு, அல்லது வரிசையிலுள்ள பாதி பேர்களுக்கு நான் பகுத்தறிந்து கூறும்போதே மயக்கம் போட்டு விழுந்து விடுவேன், மற்றவர்களுக்கு ஜெபம் செய்ய முடியாது. நம்மால் அப்படி செய்ய முடியாது. ஆனால் அது உங்களுக்கு அவசியமில்லை. உங்களுக்கு என்ன கோளாறு என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். அங்குள்ள யாருக்காகிலும் உங்கள் இருதயத்தில் ஒரு அணுவளவு சந்தேகம் இருந்தால், அதை இப்பொழுதே எடுத்துப்போட்டு, தேவன் உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள். நீங்கள் தேவனிடம் சரியாக இராமற்போனால், உங்களை மன்னிக்கும் படி தேவனிடம் கேளுங்கள். நீங்கள் அப்படி செய்யாமல், தேவனிடம் சரியாக இல்லாமலிருந்தால், இவ்வரிசையில் வருவதால் உங்களுக்கு சிறிது நன்மையும் ஏற்படாது. உங்கள் நேரத்தை நீங்கள் வீணாக்குவீர்கள். அது உண்மை, சகோதரரே, அது உண்மையா? (சகோதரர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது உண்மை. 85இங்கு பாருங்கள், சகோ. கிட் இங்கு நின்று கொண்டிருக்கிறார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை அடைய, நான் வேகமாக சென்று என் காரின் டயர்களையும் கிழிக்க விரும்பினேன். அவர் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தார். அவர் அன்று மரித்திருப்பார். அவருடைய மனைவி என்னிடம், ''வேகமாக வாருங்கள், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்கள். அங்கு நான் அடைந்தபோது, கர்த்தர் அவரை சுகப்படுத்தினார். அவர் இன்று இன்னமும் நின்று கொண்டிருக்கிறார். அவருடைய எடை அவ்வளவு அதிகமாக கூடிவிட்டது என்று நினைக்கிறேன். அவர் மிகுந்த அனுபவம் கொண்டவர். இப்படிப்பட்டவரைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பு பிரசங்கித்தவர். அவர் அந்த வார்த்தையில் உறுதியாய் நின்றார், ஜனங்கள் அவரைக் கண்டு சிரித்தனர். அவரும் அவருடைய மனைவியும் ரயில் தண்டவாளங்களின் வழியாகவும், மலைகள் மேலேறியும், நிலக்கரி சுரங்கங்களுக்கும் சென்று, அங்கிருந்து துரத்தி விடப்பட்டு, சிறைச்சாலையில் போடப்பட்டனர். பரிசை வெல்ல போராடின மனிதன், அவர் தான் அப்படிப்பட்டவர். 86சகோதரரே, இதை கூற விரும்புகிறேன். உங்களுக்கு ஒருக்கால் சிந்தனைகளைப் பகுத்தறியும் ஆவி இல்லாமல் இருக்கலாம். அது இருக்க வேண்டும் என்பதில்லை, அது அவசியமில்லை. முதலாவதாக, நீங்கள் வார்த்தையில் உள்ள மனிதர்கள். நீங்கள் என்னைக் காட்டிலும் சிறந்த பிரசங்கிமார்கள். நான் நல்ல பிரசங்கியல்ல. ஆனால் நான்... ஆனால், நீங்கள் அபிஷேகம் பெற்றவர்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள்ள எந்த ஒரு மனிதனும் வியாதியஸ்தரை சுகப்படுத்தவும் அழைக்கப்பட்டிருக்கின்றார். வழக்கமான ஒழுங்கு என்னவெனில்: “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்பதே. எனவே நீங்கள் ஊழியக்காரராயிருக்க அழைக்கப்பட்டிருந்தால், வியாதியஸ்தருக்கு ஜெபம் பண்ணவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 87இதை நான் செய்யும் காரணம் என்னவெனில்... இந்த கூட்டத்தார் ஓரல் ராபர்ட்ஸ், டாமிஹிக்ஸ், டாமி ஆஸ்பார்ன் அல்லது என்னைப் போன்ற ஒரு விசேஷித்த நபருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக - சுகமளிக்கும் ஆராதனையை நடத்த வரும் யாராகிலும் ஒருவர். நீங்களும் தேவனுடைய மனிதர்கள் என்பதை அவர்கள் காண வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? உங்களுக்கும், எனக்கு அல்லது மற்றவர்களுக்கு உள்ளது போன்று, இவர்கள் மேல் கைகளை வைக்க உரிமையுண்டு. சகோதரரே, ஊழியக்காரர் என்னும் முறையில், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள விசுவாசமே கிரியை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அது சரியா? நாம் அவர்களுக்கு ஜெபத்தை மாத்திரமே ஏறெடுக்கிறோம். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்கிறாரா?'' என்று கேட்கலாம். நிச்சயமாக. ஆம், ஐயா! கூட்டத்தில் உள்ளவர்களுக்கு, வரிசையில் உள்ளவர்களுக்கு; தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், உங்கள் கைகளையுயர்த்தி, ''அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்'' என்று சொல்லுங்கள். 88இங்கே வா, இந்த ஸ்திரீ இங்கு வரட்டும். உன்னை எனக்குத் தெரியாது. நான் உன்னைக் கண்டதேயில்லை. என்னை சூழ இங்கு நின்று கொண்டிருக்கும் இந்த சகோதரர் முன்பு, நீயாரென்று பரிசுத்த ஆவியானவர் கூறுவாரானால்; அவர்கள் மாத்திரமல்ல, என் கர்த்தரும் இங்கிருக்கிறார். அவர் அவர்களுடைய கர்த்தரும் கூட. உனக்குள்ள கோளாறு என்னவென்று அவர் என்னிடம் கூறுவாரானால், அது உண்மையென்று உனக்குத் தெரியும். பகுத்தறிந்து கூற பரிசுத்த ஆவியானவர் மேடையின் மேல் இருக்கிறார் என்பதை கூட்டத்தார், இந்த ஜனங்கள், அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால், அது யாரையும் சுகப்படுத்தாது. அவர் உன்னைக் குறித்து ஏதாவதொன்றை என்னிடம் கூறுவாரானால், அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதென்று உனக்குத் தெரியும். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயைப் போல... அதேவிதமான ஒன்று தான் இது. அதாவது ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் முதன்முறையாக சந்தித்தல். இயேசு நடுத்தர வயதுள்ளவர், இந்த ஸ்திரீ ஒருக்கால் வாலிபப் பெண்ணாக இருந்திருக்கலாம், ஒருக்கால் உன்னைப் போல். 89அவர் என் நீ எதற்காக இங்கிருக்கிறாய் என்றும், உன்னுடைய தொல்லை என்னவென்றும் அவர் என்னிடம் கூறுவாரானால், அவருடைய ஆவிதான் அதை செய்திருக்க வேண்டும் என்று விசுவாசிப்பாயா? சகோதரராகிய நீங்கள் விசுவாசிப்பீர்களா? அதே கர்த்தராகிய இயேசு இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று? கூட்டத்திலுள்ள நீங்களும் அப்படியே விசுவாசிப்பீர்களா? ஜெப வரிசையிலுள்ள நீங்களும் அப்படியே விசுவாசித்து, இந்த மனிதர்கள். அவர்கள் தகுதியற்றவர்களென்று நான் எண்ணியிருந்தால் அவர்களை மேடைக்கு அழைத்திருப்பேனா? இப்படிநான் பிரசங்கம் செய்துவிட்டு, நான் கூறினவைகளை கூறி விட்டு, தகுதியற்றவர்களை நான் மேலே வரும்படி அழைப்பேனா என்ன? அப்படி நான் செய்யமாட்டேன், அது. நான் எதைக் குறித்து பேசினேனோ, அதன் நோக்கத்தையே முறித்துவிடும். அவர்களில் எனக்கு நம்பிக்கையுண்டு, அவர்கள் தேவனுடைய மனிதர்கள் இன்று விசுவாசிக்கிறேன். 90பரிசுத்த ஆவியானவர் அருகாமையில் இருக்கிறாரா என்று பார், உன்னுடன் பேசுவதற்காக, நான் முயன்று கொண்டிருக்கிறேன்... ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று நீ கேட்கலாம். இயேசு அந்த ஸ்திரீயிடம் என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையே அவர், ''தாகத்துக்குத் தா'' என்றார். அவர் அவளிடம் ஒருநிமிடம் பேசி, அவளுக்கிருந்த தொல்லை என்னவென்பதை கண்டுகொள்ள முயன்றார். உனக்கு நரம்பு தளர்ச்சி தொல்லையுள்ளது. அதனால் நீ அவதியுறுகிறாய். அது சரியென்றால், உன் கையையுயர்த்து. அவளைக் காணும்போது நிச்சயமாய் அப்படி தோன்றவில்லை, அப்படித்தானே ,சகோதரரே? அவள் அப்படி காணப்படவேயில்லை. ஆனால் அது தான் அவளுக்குள்ள கோளாறு. நீ பாலங்களை அடைவதற்கு முன்பே, அவைகளை கடக்க விரும்புகிறாய். அது உண்மை. அது உன் இயல்பு. அப்படித்தான் உன் அமைப்பு உள்ளது. ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று நீ எப்பொழுதும் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்,, ஆனால் அது நடக்காது. சில நேரங்களில் பிசாசு உன்னிடம், ''அதெல்லாம் ஒன்றுமில்லை, நீ பின்வாங்கிப்போய்விட்டாய்'' என்கிறான். நான் மனோதத்துவ முறையில் உன் சிந்தனையிலுள்ளதை படிக்கவில்லை. ஆனால் அவன் உன்னிடம் என்ன பேசினான் என்பதை அறிகிறேன். ஏனெனில், அது உன் மனதில் எழுந்ததை நான் காண்கிறேன். 91இயேசு அவர்களுடைய சிந்தனையை அறிந்தார். அது சரியா? அது தான் இப்பொழுது நடந்தது. அது சரியா? நீ அறிந்துகொள்ள வேண்டுமென்று உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீ வேறு யாருக்காகவோ இங்கு நின்று கொண்டிருக்கிறாய். அது உண்மை. அதுதான் காரியம். நீ அதை இதுவரை கிரகித்துக் கொள்ள முடியவில்லை, நீ யாருக்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிப்பாயா? அது உன்னுடைய தாய்க்காக. அவர்களுக்கு என்ன கோளாறு என்று தேவன் என்னிடம் கூறமுடியுமென்று விசுவாசிக்கிறாயா? அவர்களுக்கு இருதயக் கோளாறு, உயர்ந்த இரத்த அழுத்தம், பித்தப்பையில் கல் - எல்லா விதமான சிக்கல்களும். அது உண்மை. இல்லையா? பாருங்கள்? அது பரிசுத்த ஆவி. இல்லையா? ஏதோ ஒன்று என் மேலும், இந்த சகோதரர் மேலும் தங்கியுள்ளது. பாருங்கள்? ஏதோ ஒன்று இங்குள்ளது. பரிசுத்த ஆவி. நாங்கள் வரிசையைக் கடக்கும் போது, விசுவாசியுங்கள். 92நாம் இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யும் போது, எல்லோரும் தலை வணங்குவோம்: எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஜனங்களின் மேல் நாங்கள் கைகளை வைக்கப் போகின்றோம். இப்பொழுது நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இதோ உம்முடைய ராஜரீக ஊழியர் நின்று கொண்டிருக்கின்றனர். நாங்கள் எல்லோருமே வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கப்போகிறோம். ஏனெனில் நீர் அப்படி சொல்லியிருக்கிறீர். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அப்படி செய்யப் போகிறோம். ஜனங்கள் வெறுமனே வரிசையில் கடந்து செல்லாமல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைந்து செல்வார்களாக, ஆமென். 93கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. நெருங்கி நடந்து வாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெறுவாயாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்துவீராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்துவீராக. இப்பொழுது. ஒரு நிமிடம், பாருங்கள். சகோதரனே, சகோதரியே, அந்த ஸ்திரீயின் விஷயத்தில் பகுத்தறியும் வரம் கிரியை செய்த போது, நீங்கள் பெருமகிழ்ச்சியடைந்தீர்கள். மற்றவர்கள் வரிசையில் வரும் போது, ஒன்றையுமே காணோமே? ஜனங்கள் வரிசையில் கடந்து செல்கின்றனர். ''நான் பகுத்தறிந்து கூறவில்லையென்றால், எனக்கு ஒன்றுமே ஏற்படவில்லை'' என்று நீங்கள் நினைக்க வகையுண்டு. அதற்கும், இதற்கும் சம்பந்தமேயில்லை. அவர் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள்? நீங்கள் வரிசையில் வரும் போது, ''உங்கள் கரங்களையுயர்த்தி, கர்த்தராகிய இயேசுவே, நன்றி. உம்மை என் சுகமாக்குபவராக ஏற்றுக்கொண்டு, அதை பெற்று செல்கிறேன். இந்த மனிதர்களில் ஒருவர் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் போகின்றார். நான் குளத்திலுள்ள தண்ணீருக்குள் சென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு வெளிவந்து, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்று நீர் அளித்துள்ள வாக்குத்தத்தத்தை அறிந்து கொள்வேன்'' என்று சொல்லுங்கள். பாருங்கள், அது... சிந்தனையைப் பகுத்தறிதல் இப்பொழுதும் இங்குள்ளது. அது இப்பொழுதும் இங்குள்ளது. அது முன்பைப் போன்றே... இங்கு, அது எது? இங்குள்ள மனிதன் யார்? நான் உமக்கு அந்நியன். நான் அந்நியன்தானே, ஐயா? எனக்கு உம்மைத் தெரியாது... உமக்குள்ள கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூறுவாரானால், நான் அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீரா? உமது முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீரா? சரி, ஐயா. நன்றி, ஐயா. அது மிகவும் நல்ல ஆவி, மிகவும் அருமையானது. நீர் வேறு யாருக்காகவோ இங்கு நின்று கொண்டிருக்கிறீர். அது உண்மை. அது உம்முடைய பேரப்பிள்ளை, அதற்கு இளம் பிள்ளை வாதம் உள்ளது, அன்றொரு நாள் அது கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டது. அது கர்த்தர் உரைக்கிறதாவது! அது சரியா? அது உண்மை. நீங்கள் சென்று, விசுவாசியுங்கள், அவன் சுகமடைவான். 94இப்பொழுது, விசுவாசமுள்ளவர்களாய் வாருங்கள். ஒவ்வொருவரும் வாருங்கள். (போதகர்கள் ஜெபவரிசையில் வரும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றனர் - ஆசி). நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால், பிணைக்கும் கட்டு ஆசிர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம், அது போன்றே இருக்கும். நமது பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பு, நமது ஊக்கமான ஜெபத்தை ஊற்றுகிறோம். நமது பயம், நமது நம்பிக்கை, நமது நோக்கங்கள், எல்லாமே ஒன்று. நமது ஆறுதலும், நமது கவலைகளும் கூட. தேவனுடைய சிறு ஊனமுள்ள பிள்ளைகளே, பார்வையற்றவர்களே, தேவன் உங்களைக் காத்துக்கொள்வார். சுவிசேஷத்தின் போதகர்களே, சுகமாக்க நமக்கு வல்லமை கிடையாதென்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நமது மகத்தான கர்த்தர் இங்கு பிரசன்னமாயிருக்கிறார் என்றும், அவர் அடையாளங்களை செய்து, ஜனங்களை கட்டியுள்ள பிசாசை கடிந்துகொள்ள முடியுமென்றும் நமக்குத் தெரியும். நாம் பிசாசை கடிந்து கொள்கிறோம்... நாம் குருட்டுத்தனத்தை கடிந்து கொள்கிறோம். தேவனுடைய குமாரனாகிய நமது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவன் உங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். விசுவாசமுள்ள ஜெபத்தை விசுவாசித்து... அதை விசுவாசிக்க நீங்கள் விசுவாசத்தை பெற்றிருங்கள். அப்பொழுது தேவன் அவர்களை எழுப்பி, அவர்கள் சுகமடைவார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, அதை அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். மற்றவர்களாகிய நீங்களும், ஜெபத்தில் தரித்திருங்கள்... போதகர்களும் அவருக்காக ஜெபித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் அவர் மேல் கைகளை வைத்து ஜெபித்தோம். 95பரலோகப் பிதாவே... ஜெப வரிசையில் வர இயலாத கூட்டத்திலுள்ள நீங்கள், ஒருவர் மேல் ஒருவர் இப்பொழுது கைகளை வையுங்கள். ஒருவர் மேல் ஒருவர், கைகளை வையுங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஆராதனையைதயும் இந்த கூட்டத்தையும், மகத்தான அபிஷேகம் பெற்ற தேவனுடைய பிரதான ஆசாரியரும், இம்மானுவேலும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், எப்பொழுதும் உயிரோடிருந்து, எங்களுக்காக பரிந்து பேசுகிறவருமான இயேசு கிறிஸ்துவின் கொடியின் கீழ் முடிக்கும் இத்தருணத்தில், இந்த கூட்டத்தாரை உம்மிடம் கொண்டு வருகிறோம். அவருடைய மகத்தான பிரசன்னம் நம்முடன் கூட இருந்து, அவருடைய பரிசுத்த வல்லமை நம்மேல் தங்கியிருந்து, நாம் தரிசனங்களைக் காணவும், தீர்க்கதரிசனம் உரைக்கவும், வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கவும் செய்கின்றது. தேவனுடைய தவறாத வார்த்தை அவரிடம் வெறுமையாக திரும்பவே முடியாது. நான் ஒவ்வொரு வியாதி பிசாசையும், பாவத்தின் வல்லமை, அவிசுவாசம் இவையானத்தையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கடிந்து கொள்கிறேன். அது ஜனங்களை விட்டு சிதறி, அவர்கள் சுகமடைவார்களாக. 96கர்த்தாவே, இந்த போதகர் சகோதரரை ஆசிர்வதிப்பீராக. அவர்கள் ஒரே இருதயமும், ஒரே சிந்தையுமுடையவர்களாய் இங்கு குழுமியுள்ளனர். சபையோரும் அவ்வாறே ஒன்று கூடியுள்ளனர். ஓ, சர்வ வல்லமையுள்ள தேவனே, ஓஹையோவிலுள்ள இந்த மகத்தான மிடில்டவுன் நகரத்துக்கு இதன் பிறகு ஒரு எழுப்புதலை அனுப்புவீராக, அது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் பரவி, எலும்புகளும், தசைகளும் ஒன்று சேருவதாக. தேவனுடைய வல்லமை தாமே ஒரு மகத்தான ஒன்றுபட்ட சபையை இந்த நகரத்தில் எழுப்பி, அது தேசம் முழுவதற்கும் ஒரு மாதிரி சபையாக அமைந்து, தேவனுடைய வல்லமையைக் காண, ஜனங்கள் இந்த நகரத்துக்குள் வருவார்களாக. பிதாவே, இதை அருளும். வியாதியஸ்தரையும், அவதியுறுபவர்களையும் சுகப்படுத்தும். இழந்து போனவர்களை இரட்சியும், மகிமையை நீரே எடுத்துக் கொள்வீராக. 97இங்கு வைக்கப்பட்டுள்ள உறுமால்களையும், சிறு பார்சல்களையும் நீர் அபிஷேகியும்... எங்கள் மேல் தங்கியுள்ளதும் இந்த கட்டிடத்தில் எங்களை அபிஷேகத்துள்ளதுமான பரிசுத்த ஆவியானவர் தாமே எல்லோரையும் சுகப்படுத்துவாராக. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் பாதையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு போய்க் கொண்டிருந்த போது, சிவந்த சமுத்திரம் பாதையில் குறுக்கே நின்றது என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ''தேவன், அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கீழே சிவந்த சமுத்திரத்தைப் நோக்கி பார்த்த போது, சிவந்த சமுத்திரம் பயந்து போய் வழி விலகினது, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த தேசத்தை அடைந்தனர்'' என்று ஒரு எழுத்தாளர் எழுதியுள்ளார். ''நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்“ என்று வேதத்தில் எழுதியுள்ளது (3.யோவான்;2). இந்த உறுமால்கள் ஜனங்களிடம் சேரும்போது, அவர்களுக்கு முன்பாக சாத்தான் சிவந்த சமுத்திரம் ஒன்றை வைத்திருக்கிறான். தேவன் தாமே தமது சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கிப் பார்த்து, இங்கு வரமுடியாதவர்களுடைய ஒவ்வொரு வியாதியையும் கடிந்து கொள்வாராக. வியாதி தேவனுடைய வார்த்தைக்கும், தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கும், தேவனுடைய அபிஷேகத்துக்கும் பயந்து விலகுவதாக. ஜனங்களும் கடந்து சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள நல்ல ஆரோக்கியத்தையும், பெலத்தையும் அடைவார்களாக. கர்த்தாவே, இதை அருள்வீராக. இவையனைத்தையும் உமது அன்பின் குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 98கூட்டத்தாரே: நம்மெல்லோரையும் அறிந்துள்ள அவருக்கே; இந்த உலகில், இந்த சபையில் அவருடைய சுதந்தரமாயிருக்கும் பொருட்டு நம்மை எழுப்பினவராகிய அவருக்கே மகிமையுண்டாவதாக. நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் தேவனுடைய அபரிமிதமான ஆசிர்வாதம், உங்கள் அனைவர் மேலும் தங்கியிருப்பதாக நாம் அறிந்துள்ளபடி, நமது அடுத்த கூட்டம் ஞாயிறு காலையன்று, ஈஸ்டர் ஞாயிறு காலையன்று - கூடாரத்தில் நடைபெறும். அதன் பின்பு நான்... அங்கிருந்து இல்லினாய்க்கு செல்கிறேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, உங்கள் சபைகளுக்கு செல்லுங்கள், அந்த அருமையான சபைகளுக்கு செல்லுங்கள், உங்கள் இருதயங்களை ஒருமனப்படுத்துங்கள், தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள்!அவருக்காக வாழுங்கள். ஏனெனில், பயங்கரமான காரியங்கள் உங்களுக்கு முன்னால் இருக்கின்றன, அதை ஞாபகம் கொள்ளுங்கள்! 99நாம் சந்திக்கும் வரைக்கும்; நாம் எழுந்து நின்று பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். இப்பொழுது பயபக்தியுடன், உங்கள் பின்னால் உள்ள, உங்கள் முன்னால் உள்ள யாராகிலும் ஒருவருடன் கைகுலுக்குங்கள், ஒவ்வொரு பக்கத்திலும். நான் அவரை நேசிக்கிறேன். (இப்பொழுது எல்லோரும் சேர்ந்து) நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். இப்பொழுது தேவனிடத்தில் உங்கள் கரங்களையுயர்த்தி, மிகுந்த சத்தமாக எல்லோரும் அதை தொனிக்கச் செய்யுங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். இப்பொழுது நாம் தலை வணங்குவோம்: நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும், இயேசுவின் பாதங்களில், நாம் சந்திக்கும் வரைக்கும், (நாம் சந்திக்கக்கூடும், நம்மில் அநேகர் அதுவரை மறுபடியும் சந்திக்காமல் போகலாம்) நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும், தேவன் உங்களோடு கூட இருப்பாராக. இப்பொழுது மௌனமாக இசையுங்கள்: (சகோ. பிரான்ஹாம் அந்த பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி).... உங்கள் போதகர்.